பார்வையில் கோளாறு.. கோழிக்கறி முதல் கேரட் வரை.. பார்வை திறனை மேம்படுத்தும் காய்.. மஞ்சள் பழம் அருமை
சென்னை: கண் ஆரோக்கியத்துக்கும், நாம் உண்ணும் உணவுக்கும் நேரடி தொடர்பு உள்ளன.. அந்தவகையில், வைட்டமின் A மற்றும் E நிறைந்த உணவுகள் என்னென்ன தெரியுமா?
கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டுமானால், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிட வேண்டும்.. கண்களி்ல் ஏற்படும் மாஸ்குலர் சிதைவை தடுக்க மீன்கள் குறிப்பாக, ஒமேகா 3 அதிகமுள்ள சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி போன்ற மீன்கள் உதவுகின்றன. கேரட், பப்பாளி, கேப்ஸிகம், சிவப்பு நிற காய்கறி, மாம்பழம், அவகேடா போன்ற மஞ்சள் நிற காய்கறி, பழங்களை தவிர்க்கக்கூடாது.

புரோட்டீன் நிறைந்த கோழிக்கறி, பால், ராஜ்மா, வேர்க்கடலை, பீன்ஸ், சியா விதைகள், ஆளி விதைகள் பச்சை இலைக்காய்கறிகள், சர்க்கரை, பட்டாணி, குடைமிளகாய், வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய் போன்றவைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால், விழித்திரை பிரச்சனை முதல் செல்கள் சேதம் அடையாமல் தடுத்து நிறுத்த உதவுகின்றன.
பாதாம்: பாதாமில் வைட்டமின் E அதிகம் இருப்பதால் கண்பார்வை அதிகரிக்கிறது. கண்களின் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தும் நிலையற்ற மூலக்கூறுகளிலிருந்தும் பாதாம் பருப்புகள் காக்கின்றன.. தினமும் பாதாம் பருப்பு நான்கைந்து இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால், அதிக பலன் கிடைக்கும்
மொத்தத்தில், பார்வை கோளாறுகள் ஏற்படாமல் நம்மை காக்க உதவுவது, வைட்டமின் A, E, A, C போன்ற சத்துக்களாகும்.. இதில், வைட்டமின் C-யை பொறுத்தவரை ஆரஞ்சு, எலுமிச்சம், பப்பாளி, கொய்யா, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி போன்றவற்றில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே, கண்களின் ரத்த நாளங்களுக்குள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவுவது இந்த வைட்டமின் C வகை உணவுகள்தான்.
பழங்கள்: வைட்டமின் E சத்துக்கள், சூரியகாந்தி எண்ணெய், பாதாம், நல்லெண்ணெய், பப்பாளி போன்றவற்றில் அதிகமாக உள்ளன.. கண்புரையை வளரவிடாமல் தடுக்க உதவுவது இந்த வைட்டமின் E சத்துக்கள்தான். பாதாமில் வைட்டமின் E அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, கண்புரை பிரச்சினையின் தீவிரத்தையும் வெகுவாக குறைக்கிறது.
அதேசமயம், கண்களின் ஆரோக்கியத்தில் வைட்டமின் A சத்துக்களின் பங்கு அபரிமிதமாகவே உள்ளது.. இந்த சத்துக்கள் இருந்தால்தான், இரவு நேரத்திலும் பார்வை கூர்மையாக தெரியும்..
கேரட், தக்காளி, தர்பூசணி, , கீரைகள், ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் A நிறைந்துள்ளன. புராக்கோலியை அரை கப் சாப்பிட்டாலே, உடலுக்கு சுமார் 60 மைக்ரோகிராம் வைட்டமின் A கிடைத்துவிடும்.
முட்டை வெள்ளைக்கரு: அதேபோல, ஒரே ஒரு முழு சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால், உடலுக்கு 1403 மைக்ரோகிராம் வைட்டமின் A கிடைத்துவிடும்.. முட்டையிலும் வைட்டமின் A உள்ளது.. குறிப்பாக, முட்டையின் வெள்ளை கருவில் உள்ள புரோட்டீனும், மஞ்சள் கருவில் உள்ள கொலாஜன், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்களை தடுக்க பேருதவி புரிகிறது.
கேரட்டிலும் வைட்டமின் A அதிகமாகவே உள்ளது.. பீட்டா கரோட்டினும், லூடீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டும் நிறைந்துள்ளதால், விழித்திரை உள்ளிட்ட கண்பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கேரட் தருகிறது.. அத்துடன், மஸ்குலர் சிதைவுக்கான ஆபத்தையும் குறைக்கிறது.
கண்ணில் இருக்கும் கார்னியாவுக்கு, மிக முக்கிய தேவையே இந்த வைட்டமின் A சத்துக்கள்தான். அரை கப் கேரட்டை, பச்சையாக சாப்பிட்டாலே, 459 மைக்ரோகிராம் வைட்டமின் A கிடைத்துவிடும். ஓட்ஸ், பார்லி போன்ற தானியங்கள் கண்களுக்கு நல்லது..
பராமரிப்பு: கண்களை பராமரிப்பதும் மிகவும் முக்கியம்.. காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது, குளிர்ந்த நீரை தெளித்து, கண்களை சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும்.. பிறகு, வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரை கொண்டு மறுபடியும் கழுவ வேண்டும். இப்படி செய்தால், கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications