மஞ்ச மஞ்சளா தொப்புளில் அழுக்கு வருதா? தொப்புளுக்கு உப்பு கரைசல் போதுமே.. சூப்பர் டிப்ஸ் பாருங்க
சென்னை: சிலருக்கு தொப்புளில் வலி ஏற்படும்.. இந்த வலிக்கு என்ன காரணம்? இதற்கு இயற்கையான முறையில் வீட்டு வைத்தியம் உள்ளதா?
அதிக அளவு பாக்டீரியாக்கள், தொப்புளில்தான் குடியிருக்கின்றன.. இந்த பாக்டீரியாக்களுக்கு வியர்வை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.. சிலசமயம், தொப்புளில் வலி இருக்கலாம், வீக்கமும் வரலாம், அல்லது கூச்ச உணர்வு வரலாம்.. அல்லது அழுக்கு போன்ற பொருட்களும் வெளியேறலாம்.. அல்லது துர்நாற்றம் வரலாம். இவைகள் எல்லாமே தொற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன.

வயிறு வலி: அதேபோல, உடலில் பலருக்கு உஷ்ணம் அதிகமாகிவிட்டால் வயிறு பகுதியே சூடாக இருக்கும்.. வயிறு இழுத்து பிடிப்பது போல வலி உண்டாகும்.. வாயு பிடிப்பு அதிகமாகிவிட்டாலும் இதற்கும் வயிற்று பகுதியிலேயே அறிகுறி தென்படும்.. அந்தவகையில், தொப்புள் வலி முதல் உஷ்ணம்வரை அனைத்துக்கும் எளிய முறையிலேயே நாம் தீர்வு காணலாம்.
முதலாவதாக தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் தடவி வருவதால், தொற்று இருந்தாலும் அதை விரட்டியடிக்கிறது.. அதேபோல் நல்லெண்ணெய் + வெதுவெதுப்பு தண்ணீர் இரண்டையும் குழைத்து, 2 டீஸ்பூன் எடுத்து லேசாக சூடேற்றி தொப்புளில் வைத்து லேசாக மசாஜ் செய்யலாம். இதனால் தொற்று இருந்தாலும் பறந்துவிடும்.. வலி இருந்தாலும் பறந்துவிடும். அல்லது நாமக்கட்டி அல்லது கடுக்காயை தண்ணீர் விட்டு குழைத்து தொப்புளை சுற்றி போட்டாலும் பலன் கிடைக்கும்.
வேப்பிலைகள்: வேப்பிலைகளுக்கு தொற்றை போக்கக்கூடிய தன்மை அதிகம்.. அதேபோல மஞ்சள் மிகச்சிறந்த ஆண்டி பயாடிக்.. எனவே, வேப்பிலை மற்றும் மஞ்சளை விழுதாக அரைத்து தொப்புளில் தடவலாம்.. இதனால் தொற்றுக்கள் நீங்குவதுடன், தொப்புளிலிருக்கும் அழுக்குகளும் வெளியே வந்துவிடும். பெருங்காயத்தை லேசாக சூடாக்கி தண்ணீரில் குழைத்து, தொப்புளை சுற்றி தடவி வரலாம்.
தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் தடவி வருவதால், தொற்று இருந்தாலும் அதை விரட்டியடிக்கிறது.. அதேபோல் நல்லெண்ணெய் + வெதுவெதுப்பு தண்ணீர் இரண்டையும் குழைத்து, 2 டீஸ்பூன் எடுத்து லேசாக சூடேற்றி தொப்புளில் வைத்து லேசாக மசாஜ் செய்யலாம். இதனால் தொற்று இருந்தாலும் பறந்துவிடும்.. வலி இருந்தாலும் பறந்துவிடும். அல்லத நாமக்கட்டி அல்லது கடுக்காயை தண்ணீர் விட்டு குழைத்து தொப்புளை சுற்றி போட்டாலும் பலன் கிடைக்கும்.
பாக்டீரியா: சிறிது தண்ணீரில் உப்பு சேர்த்து தொப்புளில் கழுவலாம்.. காரணம், உப்புக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் தன்மை உண்டு. வெதுவெதுப்பான நீரில் உப்பு கரைத்து, தொற்று பாதிப்புள்ள பகுதியில் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை பற்றுபோலவும் போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
நோய் கிருமிகள்: டீ ட்ரீ ஆயில் அல்லது புதினா ஆயிலை தொப்புளுக்கு தடவி வரலாம். இவைகளுக்கு நோய்க்கிருமிகளை தடுக்கும் ஆற்றல் இதற்கு நிறையவே உண்டு. ஆனால், டீ ட்ரீ ஆயிலை தேங்காயெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலோடு கலந்துதான் பயன்படுத்த வேண்டுமாம்.. தனியாக பயன்படுத்த கூடாதாம்.












Click it and Unblock the Notifications