முருங்கை இலை.. முருங்கைக்காயின் விதைகள்.. அதென்ன முருங்கை விதை எண்ணெய்? இது தெரியாம போச்சே.. சூப்பர்
சென்னை: முருங்கைக்கீரையை பற்றி தெரிந்த அளவுக்கு முருங்கை எண்ணெய்யை பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை.. முருங்கை எண்ணெய் எப்படி தயாரிக்கப்படுகிறது? இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா?
முருங்கையின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் முருங்கை எண்ணெய்.. இந்த எண்ணெய் கடைகளில் கிடைக்கிறது என்றாலும், இதை நாமே வீட்டில் தயாரிக்கலாம்.. எப்படி தயாரிப்பது தெரியுமா?

முருங்கை விதைகள்: முருங்கைக்காயில் உள்ள விதைகளை மட்டும் வெளியே எடுத்து, வாணலியில் கொட்டி வறுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த வறுத்த விதைகளை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். அப்போது விதைகளிலிருந்து எண்ணெய் வெளியேற துவங்கும்போது, அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரவர, அவைகளை தனியாக சேமித்து வைத்து வேண்டும். பிறகு மொத்த எண்ணெய்யையும், அப்படியே பாத்திரத்தில் 3 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும். இப்போது எண்ணெய் மட்டுமே அடியில் தங்கியிருக்கும். இந்த எண்ணெய்யையுடன், பாதாம் எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும். வெறும் முருங்கை எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் இன்னும் நன்மை கிடைக்கும்.
எண்ணெய்: சருமத்துக்கு பாதுகாவலன் இந்த எண்ணெய் என்றே சொல்லலாம்.. தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.. தலைமுடி உதிர்தல், பலமில்லாத கூந்தல், தலைமுடி வறட்சி போன்ற அத்தனை கேச கோளாறுகளையும் இந்த எண்ணெய் நீக்குகிறது. அதனால், வாரம் 2 முறை, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வரலாம்..
பொடுகு: பொடுகு தொல்லை இருப்பவர்களும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.. முருங்கை விதை எண்ணெய்யை, தலைமுடியின் மயிர்க்கால்கள் முதல் நுனிவரை தடவி விடுவதன் மூலம் பொடுகு பிரச்சனையை எளிதாக தவிர்க்கலாம்.. இந்த எண்ணெய்யில் புரதம், நிறைவுற்ற கொழுப்புகள் அடங்கியிருக்கின்றன.. அதனால், சமையலிலும் பயன்படுத்தலாம்.
அதேசமயம், இந்த முருங்கைக்காயின் விதைகளையும் சமையலில் நாம் தவிர்க்க கூடாது.. இந்த விதைகளில் ஏகப்பட்ட மருத்துவ குணத்தை கொண்டிருக்கிறது.. ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற இந்த விதைகளில் நிறைந்துள்ளன.. அதுமட்டுமல்ல, 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் விதைகளில் அடங்கியிருக்கின்றன. அதனால்தான், லேகியம் தயாரிப்புகளில் இந்த விதைகளை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.
விதைகள்: இந்த விதைகளை காயவைத்து பொடி செய்து வைத்து கொண்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உபயோகிக்கலாம்.. சிலருக்கு ஏற்படும் ஆண்மை கோளாறுகளை தீர்க்க, பெரிதும் கொடுப்பது முருங்கையின் விதைகள்தான்.. இந்த விதைகளை நெய்யில் வறுத்து தூள் செய்து, பாலுடன் காய்ச்சி குடித்தால், விந்தணுக்கள் அதிகரிக்குமாம்.. நரம்புகளும் வலுப்பெறும் என்கிறார்கள்.. அதனால், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த முருங்கை விதைகளை மருந்தாக சாப்பிடலாம்..
அதேபோல, சர்க்கரை நோயாளிகள், இந்த பொடியில் மிளகு சேர்த்து சூப் போல தயாரித்து குடிக்கலாம்.. கால்சியம், இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கும்.. இருதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளும் நீங்கும்.












Click it and Unblock the Notifications