கரிசாலை இலை.. தங்க மூலிகை கரிசலாங்கண்ணி கீரை.. உடம்பை இரும்பாக்கும்.. உள்ளுறுப்பை வலுவாக்கும் அருமை
சென்னை: தலைமுடி முதல் உள்ளுறுப்புகள்வரை காக்கக்கூடிய ஒரு கீரை என்றால், அது இந்த கரிசலாங்கண்ணி என்று சொல்லக்கூடிய கரிசாலை கீரையாகும்.
கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் இப்படி பல பெயர்கள் இந்த கீரைக்கு உண்டு..

கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி).. இதைத்தான் சுருக்கமாக கரிசாலை என்கிறார்கள்.. அதாவது இந்த இலையின் சாறு, கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தை தருவதால், இப்படி பெயர் வந்ததாக சொல்வார்கள்.
காயகற்ப மூலிகை என்றே இந்த கரிசாலையை சொல்லலாம். "தங்கம் மூலிகை" என்றும் இந்த கீரையை அழைப்பார்கள். கரிசாலை கீரையில், இரும்புச்சத்து, தங்கச்சத்து அதிக அளவில் உள்ளன.. அதனால்தான்,காரணம், உடலிலுள்ள மொத்த உடலுறுப்புகளையும் செயல்பட வைக்கும் ஆச்சரிய இலையாகும்.
கீழாநெல்லி: கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் முக்கிய உறுப்புகளை திறன்பட செயல்பட வைக்கிறது.. அதனால்தான், மஞ்சள் காமாலை இந்த கரிசாலையை, கீழாநெல்லியுடன் சேர்த்து மருந்தாக தருவார்கள்.. 2 கீரையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்துக்கொண்டு, பால் அல்லது மோரில் கலந்து 7 நாட்கள் குடித்தால் நோய் குணமாகும்.. ஈரல் வீக்கமும் குறையும்.. மஞ்சள் காமாலை வந்தால், இந்த கரிசாலையை சமைத்து சாப்பிடலாம்.
ஆனால், இவைகள் இரண்டுமே மூலிகை இலைகள் என்பதால், புளி, காரம், எண்ணெய் சேர்க்காமல் அந்த நாட்களில் பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதனால், டாக்டரின் ஆலோசனை பெறாமல் இந்த மருந்தை சுயமாக எடுக்க கூடாது.
நீரிழிவு நோய்: அதேபோல, நீரிழிவு நோயை கட்டுபடுத்தக்கூடியது இந்த கீரையை சர்க்கரை நோயாளிகள் தைரியமாகவே உணவில் சேர்த்து கொள்ளலாம்.. ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.. இந்த கீரையை அதேபோல, 48 நாட்களுக்கு, நெய்யில் வதக்கி சாப்பிட்டு, இரவில் பசும் பால் குடித்து வந்தால், ஆண்மைக்குறைவும் நீங்கும்..
உடல் எடையை குறைக்க முயற்சிப்போருக்கு, இந்த கீரை சூப்பர் சாய்ஸ் என்றே சொல்லலாம்.. காரணம், உடலில் சேரும் அதிகமான கொழுப்பை இந்த கீரை கரைத்துவிடும். வெறும் கரிசாலை இலையை தண்ணீர் விட்டு காய்ச்சி, வாரம் 2 நாட்கள் குடித்து வந்தாலும், உடலின் உறுப்புகள் பலம்பெறும்..
சளி இருமல் : இருமல், தீராத காய்ச்சலை தீர்க்கும் அருமருந்தாக இந்த கரிசாலை கைக்கொடுக்கிறது. எனவே, இந்த கரிசாலை கீரையை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்து சூரணமாக சாப்பிடலாம். அதேபோல, குழந்தைகளுக்கு சளி, இருமல் என்றால், இந்த கீரையின் சாறிலிருந்து 2 சொட்டு எடுத்து, தேனுடன் கலந்து தந்தால் நிவாரணம் கிடைக்கும்.. அவ்வளவு ஏன்? வெறும் கரிசாலை இலைகளை வாயில் போட்டு மென்று பல்துலக்கினாலே பற்கள் வெண்மையாகும்.. பல் ஈறுகளும் பலப்படுத்தும்..
தலைமுடி வளர்ச்சிக்கு கரிசலாலையை போல கை கொடுப்பது வேறில்லை.. பெரும்பாலும் வெள்ளை கரிசாலையை தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள்... இந்த கரிசலாங்கண்ணியிலிருந்து சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்துக் கொண்டால், முடியின் வளர்ச்சி அதிகமாகும்.
தலைமுடி எண்ணெய்: அல்லது, இந்த கரிசாலையிலிருந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி எடுத்து தலைக்கு தேய்த்து வந்தாலும் பலன் கிடைக்கும்.. தலைமுடி பிரச்சனை தீர்வதுடன், கண்களுக்கும் குளிர்ச்சி கிடைக்கும்.. அதனால்தான், பெண்கள் பயன்படுத்தும் கண் மை, இந்த கரிசாலை கீரையின் சாறிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அல்லது கரிசாலைச் சாறு, செம்பரத்தை, கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து தலைக்கு பயன்படுத்தலாம்..
விஷபூச்சிகள் கடித்துவிட்டால், இந்த இலையை அரைத்து, விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் வெள்ளைத் துணியால் கட்டிவிட்டால், விஷம் முறிந்துவிடும்.
கரிசாலை சாறு: கல்லீரல் செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதால்தான், இந்த கீரையை கல்லீரலின் பாதுகாவலன் என்கிறார்கள்.. இந்த கரிசாலை புற்று செல்களுக்கு எதிரியாக செயல்படும் நுண்கூறுகளை கொண்டிருக்கிறதாம்.. மேலும், ரத்தத்தில் கொழுப்பு வகைகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தக்கூடிய தன்மையும் இந்த கரிசாலைக்கு உண்டு. பித்தக் கோளாறுகள் மொத்தத்தையும் போக்கக்கூடியது இந்த கரிசாலை சாறு.. அதேபோல, கண், காது நோய்களுக்கான மருத்துவ எண்ணெய்யாக இந்த கரிசாலை பயன்படுகிறது..!!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications