Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டுக்கறி எடுக்கறீங்களா? மட்டனைவிட ஆட்டு "மூளை" பெஸ்ட்.. ஆணின் வரப்பிரசாதம்.. "இவங்க" மட்டும் உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடலுக்கு கெடுதி என்று சொல்லியே, மட்டனை முழுசாக பலர் தவிர்த்துவிடுகிறார்கள்.. ஆனால், ஆட்டுக்கறியின் பாகங்களில் பல நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. அதில், ஆட்டு மூளையும் முக்கியமானதாகும்.

ஆட்டு மூளையை பொறுத்தவரை, கொலஸ்ட்ரால் மிகவும் அதிகம். அதுவும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாகவே உள்ளன.. எனவே, உடலில் எந்தவிதமான உடல்நலக் கோளாறுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளவர்கள், மாதம் ஒருமுறை ஆட்டு மூளையை சாப்பிடலாம்.. அதுவும் அளவுடன் சாப்பிடலாம்.

Do you know the Excellent Health Benefits of Mutton Brain and Goat Brain is the Best Health Food for Men

கொழுப்பு அமிலங்கள்: இந்த ஆட்டு மூளையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பி காணப்படுகின்றன.. நம்முடைய மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான மிகவும் முக்கியமான சத்து இதுதான்..

எனவே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலே, நமக்கு இதயம் தொடர்பான ஆபத்துகள் குறையும். ரத்தம் உறைவதும் தடுக்கப்படும். கிட்னியில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது.. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.. கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்த உதவுகிறது.

ஆட்டு மூளை: அதேபோல, ஆட்டு மூளையில், மெலிந்த புரோட்டீன் நிறைய உள்ளதால், தசைகளில் உள்ள காயங்கள் எளிதாக குணமாகிவிடும்.. தசைகளின் வளர்ச்சியையும், வலிமையையும் இந்த புரோட்டீன்கள் மேம்படுத்துகின்றன..

நம்முடைய உடலில் B12 சத்துக்கள் குறைந்துவிட்டாலே, அனீமியா பிரச்சனை வந்துவிடும்.. உடல் சோர்வு, நரம்பியல் பிரச்சனைகள் இப்படி ஒவ்வொரு பாதிப்புகளும் ஏற்படலாம். ஆட்டு மூளையில் வைட்டமின் B12 உள்ளதால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் பேருதவி செய்கிறது... அத்துடன், இரும்புச்சத்து நிறைந்த ஆட்டுமூளையை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் பிரச்சனை ஏற்படாது.

விந்தணு குறைபாடு: அதேபோல, ஆண்களுக்கு இந்த ஆட்டு மூளை மிகவும் சிறந்தது.. காரணம், இந்த மூளையில் ஜிங்க் சத்துக்கள் நிறைய உள்ளன.. இது விந்தணுக்களின் உற்பத்தியை போக்குவதுடன், பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்பட செய்கிறது.. எனவே, விந்தணு குறைபாடு உடைய ஆண்கள், ஆட்டுமூளையை சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும் என்கிறார்கள்.

ஆனால் எவ்வளவுதான் நன்மையை இந்த ஆட்டுக்கறி தந்தாலும், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+