ஓமவல்லி.. வியப்பூட்டும் பலன்தரும் கற்பூரவள்ளி இலை.. சருமம் முதல் தலைமுடி வரை காக்கும் ஓமவல்லி இலைகள்
சென்னை: ஓமவல்லி என்று சொல்லப்படும் கற்பூரவள்ளி இலைகளின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடும் இந்த இலைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
ஓமவல்லி இலைகளில் வைட்டமின் C , A போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கும் இந்த ஓமவல்லி வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

ஜலதோஷம்: சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டடை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற அனைத்துவகையான சுவாச கோளாறுகள் தீர, ஓமவல்லி இலைகள் பயன்படுகின்றன. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் போட்டாலே தலைவலி, ஜலதோஷம், நீர்க்கோத்தல் பறந்துவிடும்..
அல்லது ஓமவல்லி இலையை பறித்து விழுதுபோல அரைத்து, அதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு, அதில், சிறிது ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் தலை பாரம் நீங்குவதுடன், மொத்த சளி விலகிவிடும்.. இந்த இலைகளில் ஆவி பிடித்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
சிற்றிலை: கைக்குழந்தைகளுக்கு தருவதானால், ஒரே ஒரு சிற்றிலை மட்டும் எடுத்து, அதை நெருப்பில் வாட்டி, கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, சங்கில் ஊற்றி தரலாம்.. இதனால், சளி, இருமல் நீங்கும். பெரியவர்கள் என்றால், 3 இலைகளை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் தண்ணீரில் அதை போட்டு கொதிக்க விட்டு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
வெறும் சுவாச கோளாறுகள் என்றில்லாமல், வேறு சில தொந்தரவுகளுக்கும் ஓமவல்லி உபயோகப்படுத்தலாம்.. குறிப்பாக, அஜீரண பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்றவை இருந்தால், இந்த இலை சாற்றின் சில துளிகளை எடுத்துக் கொண்டாலே போதும்.
சிறுநீரகம்: சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட இந்த ஓமவல்லி உதவுகிறது.. அதாவது, நம்முடைய ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அந்த கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்ற தூண்டுகிறது.. அந்தவகையில், ஓமவல்லி இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது... சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை காக்கிறது.
அதேபோல, ஓமவல்லி இலையிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது... தினமும் இந்த இலையை சாப்பிட்டு வந்தால், நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.. முழங்கால் வலி, மூட்டுவலி முதல், கீல்வாதம்வரை இந்த இலைகள் மருந்தாகின்றன.
ஓமவல்லி பேஸ்ட்: கண் அழற்சி, மற்றும் நரம்புகளுக்கும் இந்த இலைகள் உதவுவதால், எந்த ரூபத்திலாவது உணவில் ஓமவல்லியை எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள். அதைவிட முக்கியமாக, நரைமுடி இருப்பவர்களுக்கும் இந்த ஓமவல்லி உதவுகிறது.. நரையுள்ள தலைமுடியை கருப்பாக மாற்ற வேண்டுமானால், ஓமவல்லி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது..
முகத்தில் மருக்கள், பருக்கள், சிறு கட்டிகள் இருந்தாலோ அல்லது சோர்வு, களைப்புடன் பொலிவிழந்து முகம் காணப்பட்டாலோ, அல்லது அம்மை பாதிப்பு ஏற்பட்டு தழும்புகள் இருந்தாலோ அத்தனையையும் இந்த ஓமவல்லி இலைகளில் போக்கிவிடலாம். இலையை விழுதாக அரைத்து பற்றுப்போல போட்டு வந்தாலே, அம்மை தழும்புகள் நீங்கிவிடுமாம்.












Click it and Unblock the Notifications