Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொங்குகிறதா தொப்பை? அப்ப இதை குடிச்சி பாருங்க.. அன்னாசிப்பழமா? இது தெரியாம போச்சே? சூப்பர் 10 டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்றால், காய்கறிகளும், கீரைகளும், பழங்களும், உடற்பயிற்சியும் அவசியம்.. இவைகளுடன் நாம் அன்றாடம் குடிக்கும் பானங்களிலும் சிறிது கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய அவை பெரிதும் துணைபுரியும்.

வீட்டிலுள்ள பொருட்களை வைத்து, இந்த பானங்களை நாம் எளிய முறையில் தயாரித்து குடிக்கலாம். எனினும், வேறு ஏதாவது உடல்நல குறைவால் மருந்து, மாத்திரைகளை சாப்பிடுபவர்கள், அல்லது அலர்ஜி தொந்தரவு இருப்பவர்கள், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று இதனை பயன்படுத்தலாம். மற்றபடி உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பானங்கள் ஓரளவு கை கொடுக்கும் என்றே சொல்லலாம்.

Do you know the Excellent Health Benefits of Pineapple Fruit Tea and 10 Super Tips to reduce your Belly fat burn easily

அன்னாசிப்பழம்: முதலாவதாக, அன்னாசிப்பழத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம்.. காரணம், அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்தும், நிறைய நார்ச்சத்தும் குறைவான கொழுப்புச்சத்தும் உள்ளது. இந்த பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதியானது, நம்முடைய உடலிலுள்ள கொழுப்பை எரிக்க தூண்டி, ஜீரணத்தை எளிதாகுகிறது.. இதனால் நச்சுக்கள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து, அன்னாசியை கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தாலே, தொப்பை கறைய துவங்கும்.. உடல் எடையிலும் மாற்றம் காணலாம். அல்லது, அன்னாசியில் டீ தயாரித்து குடிக்கலாம்..

சோம்பு : ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர், டீ தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் அன்னாசி பழம், எலுமிச்சம்பழம் ஜூஸ் இரண்டையும் சேர்த்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து விட்டால் போதும். அவ்வப்போது இதை குடித்துவரும்போது, எடை இழப்பு வேகமாக ஏற்படும்.

அல்லது, ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 4 ஸ்பூன் ஓமம் பொடி மற்றும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசி பழத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். இதனை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில், வெறும் வயிற்றில், வடிகட்டி சாறு மட்டும் குடித்தால் போதும். 10 நாட்கள் தொடர்ந்து இப்படி குடித்து வந்தாலே, உடல் எடை குறைய துவங்கும்.

பட்டை தண்ணீர்: அதேபோல, ஒரு பாத்திரத்தில், 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, லவங்கப்பட்டை தூள், மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிக்கட்டி இரவு தூங்க செல்வதற்கு முன்பு குடித்து வந்தால், தொப்பை கொழுப்பை எரிக்க பெரிதும் பயன்படும்.. இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.. அத்துடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தவும் இந்த பட்டை டீ உதவுகிறது.

வெந்தய தண்ணீர்: அதேபோல, ஒரு சுத்தமான நீரில், வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெந்தயத்தை தவிர்த்துவிட்டு வெறும் தண்ணீரை மட்டும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை கரைய பெரிதும் உதவும்.. அல்லது இரவில் லேசாக நீரை சூடுசெய்து குடிக்கலாம். கேலக்டோமேனன், + ஹீட்டோரோபோலிசாக்கரைடு போன்றவை வெந்தயத்தில் நிறைந்துள்ளதால், கொழுப்பை வெகுவாக கரைக்க உதவுகிறது.

உடல் பருமனை குறைக்க, ஆயுர்வேத மருத்துவத்தில் சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு, மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது இந்த தண்ணீரில் டீ போட்டும் குடிக்கலாம்.

வசம்பு பொடி: அதேபோல, தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் வசம்பு பொடியை 5 கிராம் மட்டுமே எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும், உடல் எடையில் மாற்றம் தெரியும். திரிபலா சூரணத்தை பயன்படுத்தி வந்தாலும், உடல் எடை குறைய துவங்கும்.. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என 3 வகையான காய்களை சமஅளவு சேர்த்து அரைத்த பவுடர் இது..

திரிபலா சூரணம் கடைகளிலேயே எளிதாக கிடைக்கிறது.. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு டம்ளர் நீரில், ஒரு ஸ்பூன் பவுடரை கலக்கி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால், பலன் கிடைக்கும்.

சிலர், இரவில் இந்த பொடியை 5 கிராம் அளவுடன் சாப்பிடுவார்கள். சிலர் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பொடியை, வெதுவெதுப்பான நீரில் குடிப்பார்கள். இதுவும் பலன் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+