தேங்காய் பாறை.. மீனை வாங்கினால் பாறையை விட்றாதீங்க.. தேங்காய் பாறை மீனின் அதிசயம் பாருங்க.. சூப்பர்
சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு, உதவக்கூடிய மீன்களில் தேங்காய் பாறையும் ஒன்று.. எப்படி தெரியுமா?
வழக்கமாக, மீன்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு, இதய நோய் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் வெகுவாக குறைகிறதாம்.

என்ன ஸ்பெஷல்: மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வருவது தடுக்கப்படும். நரம்புத்தளர்ச்சி நோயும் தடுக்கப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் இருந்தாலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன்களில் கூடுதல் ஸ்பெஷாலிட்டியாகும்.
இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. உடல் எடையை குறைக்கக்கூடிய மீன்களில் ஷீலா மீன் உள்ளது. அதுபோலவே சங்கரா மீன் உள்ளது..
வகைகள்: அந்த லிஸ்ட்டில் தேங்காய் பாறை மீன்களையும் சேர்த்து கொள்ளலாம். பாறைகளிலேயே மறைந்து கொள்வதால்தான், பாறை மீன் என்கிறார்கள்.. இந்த பாறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன.
தேங்காய் பாறை மீன், வரி பாறை| நாம் பாறை, தோல் பாறை மீன்/ தேல பாறை / தேளா பாறை/ கட்டாப்பாரை மீன், பொன்னாம் பாறை மீன். கண்ணாடி பாறை மீன்/ ஓட்ட பாறை, மலபார் பாறை மீன் / லாபாறை., வங்கடை அல்லது வங்கடைப் பாறை, வயம் பாறை மீன்., செம்பாரை மீன், குமார பாறை, மெத்தம் பாறை, ஒட்டகப்பாரை, ஒட்டப்பாறை, ஒட்டாம்பாரை, சுறா மூஞ்சி பாறை, மொசிங் பாரை, ஊசிப்பாரை மீன், முயல் பாறை / மொசப்பாறை /முசுங்கு பாறை, மஞ்ச பாறை மீன். கடல் பாறை மீன்., தோள் பாறை மீன், முட்டா பாறை மீன்,. நெய் பாறை மீன். அணை பாறை மீன் என்ற வகைகள் உள்ளன.
பாறைகள்: ஒவ்வொரு மீன்களிலும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கிறது என்றாலும், பாறை மீன்களுக்கென் விசேஷ நன்மைகள் உண்டு.. இந்த மீனை சாப்பிடுவதால் தோல் நோய், முடி உதிர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்..
வைட்டமின் D நிறைந்திருப்பதால் புற்றுநோய் செல்களை நெருங்க விடாமல் தடுக்கு திறன் கொண்டது. வைட்டமின் B12 நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலின் அளவை சமமாக வைத்திருக்க பேருதவி புரிகிறது.
அபார ருசி: இந்த பாறைகளில் ஒன்றான தேங்காய் பாறை மீன்கள் அபார ருசியானவை.. குறைவான விலையில், நிறைவான பலன்களை தரக்கூடியது பாறை மீன்கள்.
இந்த பாறை மீன்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயாராகின்றன.. வைட்டமின் A, D, B 12 இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. அதாவது, 100 கிராம் பாறை மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9, நீர்ச் சத்து 66.70 கிராமும் இருக்கிறதாம்..
தேங்காய் பாறை மீன்களை பொறுத்தவரை, நிறைய புரோட்டீன்கள் நிறைந்துள்ளன.. கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால்தான், உடல் எடை குறைய இந்த மீன்களை அதிகம் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். வாரம் 2 நாள் சாப்பிட்டு வந்தாலே கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாது.
சுவை அதிகம்: ஒமேகா-3 நிறைந்த இந்த மீன்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயம் ஏற்படாது.. நீரிழிவு நோயாளிகளும் தைரியமாக சாப்பிடக்கூடிய மீன் இதுவாகும். பொரித்தாலும், குழம்பு வைத்தாலும் ருசியாக இருக்கக்கூடியது இந்த தேங்காய் பாறை மீன்கள்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications