சர்க்கரை நோயாளிகள்.. முட்டை சாப்பிடலாமா? கோழி முட்டையின் "வெள்ளைக்கரு"வில் இவ்ளோ இருக்கா? ஆச்சரியம்
சென்னை: முட்டையை தினமும் சாப்பிடலாமா? எத்தனை முட்டை சாப்பிடலாம்? சர்க்கரை நோயாளிகளுக்கு முட்டை சிறந்த உணவா?
ஒரு முட்டையின் வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீரும், 10 சதவீதம் புரதமும் இருக்கிறது.. இதில், கொழுப்பு சிறிதும் இல்லை.. அதேபோல, கார்போஹைட்ரேட் மிகக்குறைவாக உள்ளது..

சத்துக்கள்: கொலஸ்ட்ரால் 373 மி.கிராம் உள்ளன.. செலினியம், மக்னீசியம், வைட்டமின் A, E, B6 போன்ற 10 வகையான வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என ஏக்கப்பட்ட சத்துக்கள் இருப்பதால்தான், முட்டை உடலுக்கு நல்லது என்கிறார்கள்.
இதுவே மஞ்சள் கருவை எடுத்துக்கொண்டால் 100 சதவீதம் கொழுப்பு இருக்கிறது.. இந்த கொழுப்பு காரணமாகத்தான், மாரடைப்பு ஏற்படும் என்கிறார்கள்.. ஆனால், இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சிகளில், அப்படியொரு ஆபத்து எதுவும் இல்லையாம்.. எனினும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு சாப்பிடலாம்..
கால்சியம்: முட்டையை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? கால்சியம் சத்துக்கள் கிடைக்கிறது.. இதனால், பற்கள், எலும்புகள் உறுதிபடுகின்றன.. புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை முட்டைகள் குறைக்கின்றன. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.. கண் நோய்களை குறிப்பாக கண் புரையை தடுக்க முடியும்.. மூளை சுறுசுறுப்பாகும்..
கர்ப்பிணிகள் கட்டாயம் முட்டை சாப்பிட வேண்டும். அப்போதுதான், குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தை, மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறக்குமாம்.
உழைப்பாளிகள்: கடும் உழைப்பாளிகள், தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், ஒரு நாளைக்கு முட்டையின் 6 வெள்ளை கரு, 2 மஞ்சள் கருவையும் சாப்பிடலாமாம்.. ஆனால், உடல் உழைப்பு இல்லாதவர்கள், தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதும் என்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாமல், அஜீரணமும் உண்டாகும் என்பதால்தான் இரவு நேரத்தில் முட்டை சாப்பிடக்கூடாது என்பார்கள். காலை உணவுக்கு வெறும் 2 முட்டையே போதுமாம்.. அன்றைய தினத்துக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும்.
அதேசமயம் சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் அவ்வப்போது எழும்.. முட்டையில் 5 விதமான வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் அவை நரம்புக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்குகிறது. அதேபோல் மூளை வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் வைட்டமின் அதில் உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை மிகவும் நல்லதாம்..
காரணம், சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.. இதற்கெல்லாம் முக்கிய காரணம், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதுதான்..
நோயாளிகள்: அந்தவகையில், முட்டையை சாப்பிடும் நோயாளிகளுக்கு இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், லுடீன், அதிக எதிர்ப்பு சக்தியை தருவதுடன், உடல் சோர்வையும் போக்கி வலிமையை தருகிறது. எனவே, ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால், வாரம் 4 முட்டை சாப்பிடலாம்.
மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு, வெள்ளை பகுதி மட்டும் சாப்பிட்டால், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பெரும்பாலும், முட்டையை அவித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.. அதுவும் காலை உணவாக எடுத்துக் கொண்டால், அதைவிட இன்னும் சிறப்பாகும்.. காலையில் உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலின் எரிசக்தி சிறப்பாக பணியாற்றுவதுடன், அன்றைய தினம் முழுவதுமே ஒரு திருப்தி கிடைத்ததுபோல உணர்வு இருக்கும்.
பச்சை முட்டை: பச்சை முட்டையாக குடிக்காமல், இட்லி சட்டியில் ஆஃப் பாயில் போல வேகவைத்து சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்குமாம். காரணம், பச்சை முட்டையிலுள்ள வெள்ளைக்கருவில் அவிடின் என்ற புரதச்சத்தானது, பயாட்டின் என்ற வைட்டமினுடன் இணையும்போது, சில தொந்தரவுகளை ஏற்படுத்திவிடுகிறதாம். அதனால்தான், வேகவைத்து சாப்பிட சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications