தொள தொளன்னு சதை தொங்குதா? கடகடன்னு வெயிட் குறையணுமா? அப்ப இந்த மல்லி தண்ணீர் போதுமே.. பெஸ்ட் மூலிகை
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், மூலிகை தண்ணீரை பயன்படுத்தினாலே நல்ல பலனை பெறலாம்.. இதனால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை.. இயற்கையான முறையில் உபயோகப்படுத்துவதால், உடலுக்கும் நன்மையை பயக்கிறது.
அந்தவகையில், சீரகத்தை சொல்லலாம்.. சீரக விகைளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டிக்கொண்டு, இதிலிலேயே சிறிது எலுமிச்சையை பிழிந்து, 2 வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதில் மாற்றம் தென்பட ஆரம்பிக்கும் என்கிறார்கள்.

சீரகம்: சீரக தண்ணீருக்கு, உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்கள் சேரவிடாமல் தடுக்கும் தன்மை உள்ளது.. அத்துடன் கலோரிகளையும் எரிக்க செய்கிறது... மிக குறைந்த கலோரி உள்ள இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு, நம்முடைய உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது. ஏனென்றால், துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள் என அத்தனை நன்மை தரும் சத்துக்களும் பெருஞ்சீரகத்தில் நிறைந்துள்ளன..
சோம்பு நீர்: ஆயுர்வேத மருத்துவத்தில், உடல் எடையை குறைக்க சோம்பு நீர்தான் பரிந்துரைக்கப்படுகிறது... ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இந்த நீரில் டீ போட்டும் குடிக்கலாம். வெறும் வயிற்றில் இப்படி சோம்பு தண்ணீரை குடித்து வந்தாலும், உடலிலுள்ள கலோரிகள், கொழுப்புகள் கரைந்து குறைய துவங்கும்.. பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் வளரக்கூடிய சதையை கரைக்க, இந்த சோம்பு தண்ணீர், பெரிதும் உபயோகமாகிறது.
வெந்தய விதைகளையும் நீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில், அந்த தண்ணீரை மட்டும் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால், இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுவதுடன், கொழுப்பு எரிக்கும் செயலும் வேகப்படுத்தப்படும்.
மல்லி விதை: தனியா என்று சொல்லக்கூடிய மல்லி விதைகளும், குடல் இயக்கத்தை மேம்படுத்துகின்றன. நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை உடையது என்பதால், இன்சுலின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.. ரத்த சோகை நோயையும் தீர்த்து, ரத்த அழுத்தத்தையும் குறைத்து, அலர்ஜி, கண் தொற்றுகளையும் குணமாக்குகிறது.. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் சக்தி, இந்த மல்லி விதைகளுக்கு உண்டு என்பதால், உடல் எடையும் குறைய துவங்குகிறது.
ஓமம் மிகச்சிறந்த மூலிகை மருந்தாகும்.. இந்த ஓமத்தையும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. அல்லது ஓம தண்ணீரையும் குடித்து வரலாம். இதனால் எடை குறைவதுடன், ஆஸ்துமா பிரச்சனையும் தீருகிறதாம்.
மிளகு: மிளகில் இருக்கும் பைப்பரின் என்ற சேர்மம், நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications