கானா வாழை கீரை.. பெண்களின் அமுது.. மகிழ்ச்சி வாழ்வுக்கு உதவும்.. கானா வாழையின் சூப்பர் ஹெல்த் டிப்ஸ்
சென்னை: கானா வாழை இலைகள் பெண்களின் வரப்பிரசாதம் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இளம் தம்பதியினர் தவறவே விடக்கூடாத கீரைகளில் இந்த கானா வாழை பிரதான இடத்தை பிடித்துள்ளதற்கு என்ன காரணம் தெரியுமா?
ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது இந்த கானா வாழை.. நீல நிற கலரில் இருக்கும் இந்த கீரையானது, நம்முடைய கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கு வலுவை தரக்கூடியது.. சிறுநீர்ப் பாதை, நுரையீரல் என எங்கு தொற்றுக்கள் இந்தாலும் அவைகளை வெளியேற்றக்கூடியது.

ரத்த சுத்திகரிப்பு: ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கானா வாழைக்கு உண்டு.. கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது..
மாவுச்சத்து, நர்ச்சத்து, புரதச்சத்து போன்ற சத்துக்கள் இந்த கானா வாழையில் உள்ளது. முட்டை வடிவத்தில் இந்த கீரையை ஒரு கைப்பிடி தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிது மிளகு தூள் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் பறந்துவிடும்.. வயிறு, வாய்களிலுள்ள புண்களும் ஆறும். தூதுவளை கீரையுடன், கானா வாழை கீரையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் விலகும்.
கீரைகள்: இந்த கீரையிலிருந்து சாறு எடுத்து, அதனை தண்ணீருடன் கலந்து வாய் கொப்பளித்து வந்தால், வாயிலுள்ள கிருமிகள் அகலும். பல் ஈறுகளுக்கும் நன்மை தரக்கூடியது. வாய் சுகாதாரமும் பேணக்கூடியது.
பெண்களின் மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் ஏற்பட்டால், இந்த கானா வாழையின் செடியை அரைத்து பற்று போல போட்டால் தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு, கானா வாழை இலை தீர்வை ஏற்படுத்துகிறது.. இந்த இலையுடன், சம அளவு கீழாநெல்லியும் அரைத்து, தயிரில் சேர்த்து, தினமும் 2 வேளை சாபபிட்டு வரும்போது, வெள்ளைப்போக்கு குறையும்,
மாதவிலக்கு: அதேபோல, மாதவிலக்கு நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தாலும், இக்கீரையை சமைத்து சாப்பிடலாம். துவரம் பருப்பு சேர்த்து மற்ற கீரைகளை போல கடைந்து சாப்பிடலாம், பஜ்ஜி செய்யலாம்.
சீன மக்களின் அடிப்படை மூலிகையே இந்த கானா வாழைதானாம்.. தொழுநோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றை போக்கக்கூடிய மருந்தாக உபயோகப்படுகிறது.. நீண்ட காலம் படுக்கையிலை இருந்தவர்கள், இந்த இலையை அரைத்து பற்று போல உடலில் தடவினால், புண்கள், எரிச்சல் மறைந்துவிடும். இந்த இலையை லேசாக கசக்கி முகப்பருவில் வைத்தாலும், பலன் கிடைக்கும்.
பால்வினை நோய்: வாத நோய்களில் அவதிப்படுபவர்கள் கானா வாழையை எடுத்துக் கொள்ள வேண்டும்.. அதேபோல, பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களும் இக்கீரையை தவிர்க்கவிடக்கூடாது. இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்கள் மீது தடவினால், எப்பேர்ப்பட்ட புண்களும், காயங்களும் ஆறிவிடுமாம்.. முகப்பருக்களுக்கும் இந்த விழுதை பயன்படுத்தலாம்,.
அதைவிட முக்கியமாக, குழந்தையில்லாத தம்பதிகளின் குறையை இந்த கீரை போக்குகிறது. ஒரு டம்ளர் நீரில், இந்த கானாவாழை இலையை சேர்த்து, அதில், தூதுவளைப்பூ, முருங்கைப்பூக்களையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி சூடான பாலில் பனங்கற்கண்டுடன் கலந்து குடித்து வரும்போது, குழந்தைப்பேறு உண்டாகும். ஆண்கள் இதனை 40 நாட்களுக்கு குடித்து வரும்போது, உடலில் தாது பலம் கூடும்.
தாம்பத்தியம்: அல்லது இந்த கீரையுடன், சிறிது கொட்டைப்பாக்கு சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், தாம்பத்தியம் சிறக்கும்.. அதேபோல, இந்த இலையிலிருந்து சாறு எடுத்து, அதில் கசகசாவை ஊற வைத்து விழுதாக அரைத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்யம் சிறக்கும்.
கானா வாழை சாற்றில், ஜாதிக்காயைச் சேர்த்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து தினசரி 3 கிராம் அளவு உட்கொண்டு வந்தாலும், நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் நீங்கும்
ஆண்களின் மருந்து: வெறுமனே கானா வாழையை, முருங்கைப்பூ, துவரம்பருப்பு சேர்த்து நெய் சேர்த்து, கூட்டு போல சமைத்து 21 நாள்கள் சாதத்துடன் சாப்பிட்டு வந்தாலும், தாம்பத்யம் சிறக்கும். இந்த கீரையின் சாறு, விந்து முந்துதலை கட்டுப்படுத்துமாம். எனவே, அடிக்கடி முறை கானா வாழையை துவரம் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, ஆண்மை கோளாறுகளும் நீங்கும்.
நுரையீரல்: அதேபோல, கானா வாழை காய்ச்சலை போக்கக் கூடிய மூலிகையாகவும் விளங்குகிறது.. சிறுநீர் பெருக்கியாகவும் உடலினுள் தேங்கிக் கிடக்கும் உப்புச்சத்தை வெளியேற்றும் மிகப்பெரிய பணியை செய்கிறது. சிறுநீரகப் பைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல், நுரையீரல் இரையறை ஆகியவற்றுக்கு பலம் தருவதோடு, அவற்றின் கோளாறுகளை சீர் செய்வதால், மருத்துவத்தில் இந்த கீரைக்கு முக்கிய பங்கு உள்ளது. தொழு நோய்களையும், கால்களில் நீர் தேங்கி வீக்கம் இருந்தாலும், இந்த கீரை குணமாக்குகிறதாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications