வாழை இலை.. வெயிட் லாஸ் முதல் சரும ஆரோக்கியம் வரை உதவும் அதிசய சாறு.. தலைமுடி வளர்ச்சிக்கு வாழை இலை
சென்னை: வாழையிலையில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த வாழையிலையை அரைத்து பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் அதைவிட ஏராளம்.. அவை என்னென்ன தெரியுமா?
வாழையிலையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போடவே முடியாது.. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு இப்படி பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
கழிவுகள்: உடலிலுள்ள கழிவுகளை நீக்கக்கூடியது இந்த வாழை.. இதற்கெனவே பிரத்யேகமாக மூலிகை சிகிச்சைதான் வாழையிலை குளியல்.. இதற்கென பிரத்யேகமான முறை உள்ளது..

இந்த குளியல் எடுத்து கொள்வதால், உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கி, உடல் எடையை குறைக்க செய்யும்.. உடல் வீக்கத்தை போக்கி, கை, கால்வீக்கத்தைப்போக்க செய்யும்.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்த செய்யும்.. சிறுநீரக செயலிழப்பை தடுக்க செய்யும்.. புத்துணர்ச்சி மீட்டுத்தரும் தரும்..
குளிர்ச்சி இலைகள்: குளிர்ச்சி மிகுதி என்பதால்தான், இந்த இலையை அரைத்து, பலவித நோய்களுக்கு தீர்வாக பயன்படுத்துகிறார்கள்.. இயற்கையான ஆன்டிபயாடிக் என்பதால், எந்தவிதமான அலர்ஜியும் இதனால் ஏற்படாது.
குறிப்பாக, கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த வாழைதான் உதவுகிறது.. வைட்டமின் A, C, K என வைட்டமின்கள் உள்ளதால், குடற்புண்கள் ஆறுகின்றன..
அதுமட்டுமல்ல, வாழையிலையின் சாறு, நம்முடைய சருமத்துக்கு போதுமான பாதுகாப்பை தருகின்றன. சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு இந்த வாழையிலை சாறு உபயோகமாகிறது.. வாழையிலையை அரைத்து பூசி வந்தால், இதுபோன்ற தொந்தரவுகள் எல்லாம் நீங்கிவிடும்.. வேனல் கட்டிகளும் உடைந்துவிடும்..
சரும நோய்கள்: அதேபோல, சரும பொலிவுக்கும் இந்த சாற்றினை பயன்படுத்தலாம்.. வாழையிலையில் அலட்டாயின் என்ற சத்து நிறைந்துள்ளதால், ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் அல்லது தயிர் இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி வரலாம்.. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன..
அதேபோல, வாழையிலை சாறை, ஃப்ரிட்ஜில் ஐஸ்கட்டியாகும்வரை வைத்துவிட வேண்டும். பிறகு, அந்த ஐஸ் கட்டிகளை கொண்டு, சருமத்தில் தேய்த்து வந்தாலே, சருமம் மென்மையடையும்.. இந்த சாறில் இருக்கும் உட்பொருட்கள் சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்க கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவி செய்யும்.
நல்லெண்ணெய்: பச்சிளம் குழந்தைகளுக்கு சரும பிரச்சனை என்றாலும், இந்த வாழையிலைதான் மருந்தாகின்றன.. குழந்தையின் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து, காலை நேரத்தில் சூரிய ஒளி படும்படி, படுக்க வைப்பார்கள். சூரிய ஒளியியிலிருந்து வைட்டமின் D, மற்றும் வாழையிலையிலிருந்து குளிர்ச்சி என இரண்டுமே கலந்து சரும நோயை நீக்கிவிடும்.. அம்மை புண்கள் வந்தாலும், வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தாலே, நிவாரணம் கிடைக்குமாம்.
சருமத்துக்கு உதவுவது போலவே, தலைமுடிக்கும் இந்த வாழையிலை சாறு உதவுகிறது.. தலையில் அரிப்பு, பொடுகு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும், இந்த சாற்றினை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.
தலைமுடி வளர்ச்சி: இந்த சாற்றிலுள்ள, அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அலன்டோயின் பொருட்கள் தலைமுடிக்கு நல்ல நிறத்தையும் தருகின்றன.. வாழை இலை சாற்றை எடுத்து தலையில் மாஸ்க் போட்டும் குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். அவ்வளவு ஏன்? வாழை இலையில் சாப்பிட்டாலே இளநரை வராமல், தலைமுடி கருப்பாக இருக்குமாம்.
இவ்வளவு நன்மைகளை தந்தாலும், வாழையிலை சாற்றினை நேரடியாக சருமத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். அதனால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே பயன்படுத்த வேண்டும்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications