ஒரே காய்.. சர்னு வெயிட் குறையும் பாருங்க..சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை விரட்டும் ஆச்சரியக்காய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைப்பதில் சுரைக்காயின் பங்கு ஏராளம்.. நீரிழிவு நோய் முதல் சரும புற்றுநோய் வரை மருந்தாகிறது இந்த சுரைக்காய்.

சுரைக்காயை பொறுத்தவரை தண்ணீர் காய்.. அதாவது, கிட்டத்தட்ட 96 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ள காய்.. எனவே, தாகத்தை தீர்க்க சுரைக்காயை விட சிறந்த காய் வேறில்லை.. உடலில் புத்துணர்ச்சியை தருகிறது.. உடல் சூடு தணிகிறது.. குளிர்ச்சியை பெருக்குகிறது..

Do you know the health benefits of bottle Gourd and bottle gourd is best vegetable for weight loss

ரத்த அழுத்தம்: இந்த காயில், இரும்புச்சத்து, வைட்டமின் B, C , பொட்டாசியம், என்ற ஏகப்பட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.. எனவே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.. இதனால், இதய பிரச்சினைகளின் அபாயத்தையும் இந்த காய்கள் குறைக்கின்றன.

குளிர்ச்சி காய் என்பதால், மூல நோய், மூல எரிச்சல் போன்றவற்றிற்கு மருந்தாகிறது.. பித்தமும் தணிகிறது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு உள்ளவர்கள், இந்த சுரைக்காயுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.. ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.. நீரிழிவு நோயாளிகள் இந்த காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அடிக்கடி தாகம் ஏற்படுவது தணிவதுடன், சர்க்கரையும் கட்டுப்படுத்தப்படும்..

நச்சுக்கள்: அஜீரணத்தை போக்க, கழிவுகளையும், நச்சுக்களையும் நீக்கி, குடல் ஆரோக்கியத்தை இந்த சுரைக்காய் காக்கிறது. இந்த காயின் சதைகளை எடுத்து, கை, கால்களில் எரிச்சல் உள்ள இடங்களில் கட்டினால், உடல் முழுவதுமே குளிர்ச்சி பெறும்.

சரும புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக இந்த சுரைக்காய் கண்டறியப்பட்டுள்ளதாம்.. காரணம், புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கக்கூடிய பண்பு இந்த சுரைக்காய்க்கு உள்ளது. கல்லீரல் பாதுகாப்பையும் அதிகப்படுத்தக்கூடியது இந்த சுரைக்காய்.

தூக்கம் வராதவர்களுக்கு இந்த சுரைக்காய் நல்மருந்தாகும்.. நல்லெண்ணெய் + சுரைக்காய் சாறு இரண்டையும் சேர்த்து தலைமுடிகளில் தேய்த்து மசாஜ் செய்து தூங்கினால் நன்றாக தூக்கம் வருமாம். அல்லது சுரைக்காயின் இலைகளை சமைத்து சாப்பிட்டாலும் நிம்மதியான உறக்கம் வருமாம்.

உடல் எடை: உடல் எடை குறைய வேண்டுமானால், சுரைக்காயை மட்டும் விட்டுவிட வேண்டாம்.. கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடியது இந்த சுரைக்காய்.. பெரும்பாலும் சாம்பாரில் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தாலே போதும், கண்ணெதிரே உடல் எடையில் மாற்றம் தெரியும்.

சுரைக்காயில் தோல், மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதைகளை மீக்சியில் அரைத்து, வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தால், ஊளைச்சதை குறைந்து, உடல் எடை நிச்சயம் குறையும். இதனால், சருமமும் பளபளப்பாகும்.. மன அழுத்தமும் நீங்கிவிடும்.. இதனால், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், நீர்ச்சத்துக்கள் என அனைத்துமே கிடைக்கிறது.. இதனால், பசியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

குளிர்ச்சிக்காய்: ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்கள், இரும்புச்சத்து நிறைந்த சுரைக்காயை தவிர்க்கக்கூடாது.. கால்சியம், துத்தநாகம் நிறைந்திருப்பதால், எலும்புகளை வலுப்படுத்துவதுடன், பற்களின் பலத்தையும் இந்த சுரைக்காய் மேம்படுத்துகிறது

கம்ப்யூட்டரில் நீண்ட நேரமாக வேலை பார்ப்பவர்களுக்கு, உடல் உஷ்ணம் ஏற்படுவதுடன், கண்களிலும் குறைபாடுகள் ஏற்பட துவங்கும்.. இதற்கு சுரைக்காயை சுட்டு சாம்பலாக்கி, அதை தேனில் குழைத்து சாப்பிட்டாலே, கண் குறைபாடுகளை நீங்குகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+