தொந்தி தொங்குதா? அப்ப இந்த 2 விதை போதுமே.. மூட்டுவலி முதல் நீரிழிவு வரை விரட்டும் குட்டி குட்டி விதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைப்பதில், காய்கறிகள், பழங்கள் மட்டுமேயல்லாமல் விதைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில், சுரைக்காய் மற்றும் பூசணி விதைகளின் பயனையும் தவிர்த்து விட முடியாது.
இந்த சுரைக்காய் விதைகளில் வைட்டமின் B, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து நிறைந்துள்ளதால், சிறுநீரை அதிகப்படுத்தி, சிறுநீரகப் பாதை நோய்தொற்றை தடுப்பதில், இந்த விதை பெரும்பங்கு வகிக்கிறது. பித்தத்தையும் நீக்குகின்றன.

விதைகள்: இந்த விதைகளை வெயிலில் காயவைத்து, தோலை நீக்கி, அதிலுள்ள பருப்பை மட்டும் வெளியே எடுத்து வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் பெரும்பலன் கிடைக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. அதேபோல, சுரைக்காய் விதைகளை பொறுத்தவரை, குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளன.. நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த சுரைக்காய் மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.

Do you know the Health Benefits of Bottle Gourd Seeds and Pumpkin seeds are the Super food for Weight Loss

பூசணி விதைகள்: பூசணி விதைகளை பரங்கி விதை என்றும் சொல்வார்கள்.. புரோட்டின், அசிட்டிக் ஆசிட, வைட்டமின் B, தையமின், நியாசின் போன்ற சத்துக்கள் இந்த பூசணி விதைகளில் உள்ளன. ஒரு டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்பார்கள்..

இந்த பரங்கி விதைகளை வெயிலில் உலர்த்தி பொடி செய்து எடுத்து வைத்து கொண்டால், நிறைய தீர்வுகளுக்கு பயன்படுத்தலாம்.. அந்தவகையில் ஒரு சிலவற்றை பார்ப்போம்:

- பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

- தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம், இந்த பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளதால், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கிறது.

- நார்ச்சத்து, தாதுக்கள், பாஸ்பரஸ் உள்ளதால், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

- வெறும் 100 கிராம் பூசணி விதைகளில், 18 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இது ஒரு சராசரி மனிதனின் தினசரி தேவையில் 72 சதவீதம் ஆகும்.. எனவே, ஆரோக்கியமான வழியில் எடை குறைக்க இந்த பூசணி விதைகள் உதவுகின்றன.

- கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த விதைகளை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

- அடிக்கடி பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. குடற்புழுக்களும் அழிந்துவிடும்

- கால்சியம் நிறைந்த இந்த விதைகள் எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதி தரக்கூடியவை..

- பெண்கள் தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தாலே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தடுக்கலாம். இந்த விதைகளை நெய்யில் வறுத்து, சாப்பிட்டுவந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தடுக்கப்பட்டுவிடும்

- தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகளை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், விந்தணு எண்ணிக்கையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த விதைகளை பொடி செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால், ஆண்களுக்கு உடல் உஷ்ணமும் குறையும்.

- பூசணி விதைகளில் உள்ள ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பொருள்கள், உள்காயங்களை விரைந்து ஆற்றும் தன்மை பெற்றவை.
- பொதுவாகவே, தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு அபாயம் குறைகிறதாம். அத்துடன் கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை இந்த விதைகள் பாதுகாப்பை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+