சிற்றரத்தை.. நோயை சிதைக்கும் மூலிகை "சித்தரத்தை".. மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை அண்ட விடாத சஞ்சீவி
சென்னை: நம்முடைய முன்னோர்கள், வீடுகளில் தவறாமல் வைத்திருந்த சித்தரத்தை மூலிகையாகும்.. இது பொடியாகவே கடைகளில் கிடைக்கிறது. இந்த மூலிகை தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
அரத்தை, சிற்றரத்தை, என்றெல்லாம் இந்த சித்தரத்தைக்கு பெயர்கள் உண்டு.. பார்ப்பதற்கு இஞ்சி போலவே இருக்கும்... சித்தரத்தையில், சிற்றரத்தை, பேரரத்தை என்று 2 வகைகள் உண்டு.

சளி, இருமல், காய்ச்சல், கபம் போன்றவற்றை தீர்க்கும் வரப்பிரசாதம்தான் இந்த் சித்தரத்தை.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சித்தரத்தையை மருந்தாக பயன்படுத்தலாம்.. அந்தவகையில், நுரையீரலின் பாதுகாவலன் என்றே இந்த சித்தரத்தையை சொல்லலாம்.
நெஞ்சு சளி: குழந்தைகளுக்கு நெஞ்சு சளி இருந்தால், இந்த சிற்றரத்தை பொடியை, சிறிது எடுத்து தேனில் கலந்து தருவார்கள்.. பெரியவர்களாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் நெஞ்சு சளி கரைந்து வெளியேறும். ஒருவேளை நீண்ட நாட்களாகவே, கபம் சேர்ந்துவிட்டால், சிற்றரத்தை பொடியுடன், சுக்குத்தூள் பொடியையும் கலந்து தேனில் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது சிற்றரத்தை பவுடரையும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், காய்ச்சலும் நீங்கும்.
வறட்டு இருமல் இருந்தால், வெறும் சித்தரத்தை துண்டை சிறிது எடுத்து, வாயில் அடக்கி வைத்தால் போதும்... உமிழ்நீருடன் கலந்து சாறு தொண்டையில் இறங்கவிடும்.. இதனால், கோழைகளும் வெளிேயேறும். அல்லது சிற்றரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சவைத்தாலும், இருமல் கட்டுப்படும். உணவை மெல்ல முடியாமல் அவதிப்படுபவர்களுக்கும் இது தீர்வாக அமையும்..
நோய் எதிர்ப்பு சக்தி: உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது.. குரல் வளத்தை தரக்கூடியது சிற்றரத்தை பொடி.. வாய் நாற்றம் இருப்பவர்கள், இந்த சித்தரத்தை துண்டு எடுத்து வாயில் அடக்கி வைத்துக் கொண்டால் போதும்.. அதேபோல, சிற்றரத்தையை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, பல் தேய்த்து முடித்ததும், இந்த நீரில் வாய் கொப்புளித்தால், வாய்ப்புண்கள் ஆறும்.. வாய் துர்நாற்றம் நீங்கும்.. ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும்
கர்ப்பிணிகளுக்கு தயாராகும் லேகியங்கள், மற்றும் பற்கொடிகளில் இந்த இந்த சித்தரத்தையின் வேர்களை சேர்த்து தயாரிப்பார்கள்.. அதேபோல, பிரசவம் முடிந்த பெண்களுக்கு தயாரித்து தரப்படும் மருந்து குழம்புகளில், சித்தரத்தை முக்கிய பங்கு வகிக்கிறது..
மாரடைப்பு: இந்த சித்தரத்தை கொழுப்பு சத்தை கரைக்கக்கூடியது.. ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது.. அதுமட்டுமல்ல, சிற்றரத்தை, தாமரைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து, ஒரு ஸ்பூன் அளவுக்கு, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தாலே, மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என்கிறார்கள்.
அதைவிட முக்கியமாக, புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசய கூறுகளை, இந்த சிற்றரத்தையில் உள்ளதாக, "நேச்சுரல் மெடிசின்" சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.. அதாவது, இதில் நிறைந்த "அசிடாக்ஸிகவிக்கால் அசிட்டேட்" என்ற பொருள், புற்றுநோய் மரபணுக்களை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறதாம். அந்த அளவுக்கு அற்புத மூலிகைதான் இந்த சிற்றரத்தை.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications