சிந்து நதி நீரை தடுப்போரின் கைகளை வெட்டுவோம்.. இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இதனால் பாகிஸ்தான் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இந்நிலையில் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி தண்ணீர் தர மறுக்கும் நபர்களின் கைகளை வெட்டுவோம் என்று பாகிஸ்தான் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் முசாதிக் மாலிக் வாய்ச்சவடால் விடுத்துள்ளார்.

Tense Indus River water dispute between neighbor nations

கடந்த 2025ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர்.

இதற்கு பலியானதாக பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் போகவில்லை. இதனால் பாகிஸ்தான் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் முசாதிக் மாலிக் கூறுகையில், ''அண்டை நாட்டு பிரதமர் (நரேந்திர மோடி) சிந்து நதி நீரை கட்டுப்படுத்துகிறார். பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறுகிறார். எங்களது தண்ணீர் பங்கீட்டை தடுக்கும் நபர்களின் கைகளை வெட்டுவோம்'' என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதன்மூலம் பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் நம் நாட்டின் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறுகையில், ''சிந்து நதி நீர் ஒப்பந்தம் இன்னும் சட்டப்பூர்வமாக அமலில் உள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ, திருத்தவோ முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு உலகளவில் ஆதரவு கிடைக்கவில்லை'' என்றார்.

பாகிஸ்தானின் முக்கிய நீராதாரமாக சிந்து நதி நீர் தான். சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை நம் நாடும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொண்டு வந்தன. 1960ம் ஆண்டில் உலக வங்கி முன்னிலையில் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நீர் பங்கீடு செய்யப்பட்டு வந்தது.

அதன்படி இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 24 கோடியாக உள்ளது. இதில் 22 கோடி பேருக்கு நீராதாரம் என்பது சிந்து நதி தான். இப்போது நம் நாடு அந்த தண்ணீரை நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. இதனால், சிந்து நதி நீரை இந்தியா திறந்து விட வேண்டும் என்று பாகிஸ்தான் கதறி வருகிறது. தற்போது அந்த நாட்டின் அமைச்சர் நம் நாட்டுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இப்படி மிரட்டல் விடுவது ஒன்றும் புதியது அல்ல. இதற்கு முன்பு சிந்து நதி நீரை திறந்து விடாவிட்டால் ரத்த ஆறு ஓடும். பாகிஸ்தான் அணுகுண்டுகளை வீசும் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் தொடர்ந்து நம் நாட்டுக்கு கடிதம் எழுதி சிந்து நதி நீர் கோரியது. இருப்பினும் நம் நாடு அசரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+