முருங்கைக்கீரை.. அதிசயத்தை காட்டும் முருங்கை.. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சூப்பர் பழங்கள் இதான்
சென்னை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்தான், நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்க முடியும்.. இந்த எதிர்ப்பு சக்திகளை தருவது, ஆரோக்கியமான உணவுகள்.. அதில் ஒருசில உணவுகளை மட்டும் பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் தேவைப்படுவது வைட்டமின் C நிறைந்த உணவுகள்.. வைட்டமின் B, கால்சியம் சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ் போன்றவை அனைத்துமே சேர்ந்துதான், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன..

அந்தவகையில், நெல்லிக்காயை முதன்மையான பழமாக சொல்லலாம்.. வெறும் நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டுவரலாம் அல்லது ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம். அதேபோல, ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C, E, இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.. இதையும் வெறும் பழமாகவும் சாப்பிடலாம், ஜூஸ் தயாரித்தும் சாப்பிடலாம்.
ஆரஞ்சு, நெல்லிக்காய்: இதில் ஆப்பிள் பழத்தையும் சேர்த்து கொள்ளலாம்.. அதிகமான வைட்டமின்கள் இந்த ஆப்பிளில் உள்ளதால், நுரையீரலுக்கு செல்லும் ரத்த ஓட்டமும் சீராகிறது..
ஆப்பிள், நெல்லிக்காய், ஆரஞ்சு என எந்த ஜூஸ் தயாரித்தாலும், அவைகளில், எலுமிச்சம் சாறு கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் அல்லது இஞ்சி சாறு சேர்த்து குடிக்க வேண்டும். இவைகளெல்லாம், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற செய்து, நோய் எதிர்ப்பு வீரியத்தை அதிகரிக்க செய்யும் பழங்களாகும். இவைகளை தவிர, கிவி மற்றும் பப்பாளியையும் தவிர்க்க கூடாது.
சிட்ரஸ் பழங்கள்: சுருக்கமாக சொன்னால், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம், அன்னாசிப்பழம் போன்ற சிட்ரஸ் வகைகளில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை இவைகள் வலுப்படுத்துகின்றன.
கீரைகளில், பெஸ்ட் முருங்கைக்கீரைதான்.. முருங்கைக்கீரையில், ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன.
கீரை சூப்: முருங்கை கீரையை சூப்பாக சாப்பிட்டால், உடலில் உடனே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. ஒரு கைப்பிடி முருங்கை கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, நான்கைந்து சின்ன வெங்காயம், சிறிய தக்காளி, மஞ்சள் துாள் என அனைத்தையும், தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்து விட்டு, மற்றவைகளை மிக்சியில் அரைத்து, வடிகட்டிய தண்ணீருடன் கலந்துவிட வேண்டும. இப்போது ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், கருவேப்பிலை தாளித்து கொட்டி, மிளகு துாள் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகச்சிறந்த சூப்பாக இது அமையும்.
கிரீன் டீ: பானங்களில் எடுத்துக் கொண்டால், கிரீன் டீ இந்த பணியை சிறப்பாக செய்கிறது.. எபிகல்லோகேடசின் கேலேட் என்ற பொருள் இந்த கிரீன் டீயில் உள்ளதால், நோயை எதிர்த்து போராடும் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக இது செயல்படுகிறது. சமையலில் நிறைய இஞ்சி, மஞ்சள், மிளகு, பூண்டு, தயிர், மோர், இந்த மூன்றையும் சேர்த்து கொள்வதால், நச்சுக்கள் வெளியேறி, எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications