Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த கருவாடு பெஸ்ட் + அதிசயம்.. அதென்ன "அந்த" மீன் மட்டும் ஸ்பெஷல்? கர்ப்பிணி கருவாடு சாப்பிடலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அயிரை மீன்கள் என்றாலே மதுரை மாவட்டம் ஃபேமஸ் தெரியுமா? கருவாடுகளிலேயே ருசியான கருவாடு எது தெரியுமா? கர்ப்பிணிகள் ஏன் கருவாடு சாப்பிடக்கூடாது தெரியுமா?

பெரும்பாலும், கருவாடுகளை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. கருவாடுகளில் நிறைய கால்சியம் சத்துக்கள் உள்ளதால், எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகின்றன. எனவே, ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு நன்மைகளை தரக்கூடியது..

Do you know the Health Benefits of Dry Fish and what are Amazing uses of Nethili, Aylai, Paal Sura Dry Fishes

குறிப்பாக, கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.. கெளுத்தி மீனைவிட, உப்பங் கெளுத்திக்கருவாட்டில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. சீலா மீனைவிட, சீலா கருவாடு மிகவும் நல்லது. உடம்பில் ரத்த விருத்தி இல்லாவிட்டால், இறால் கருவாடு செய்து சாப்பிடலாம். வாய்வு பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்..

சுவாச கோளாறுகள்: இருமல், சளி உள்ளவர்களுக்கு எந்த கருவாடுகளை பயன்படுத்தியும் ரசம் போல வைத்து தரலாம். அதாவது, மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி இந்த 4 பொருட்களையும் சேர்த்து, ரசம் வைத்து சாப்பிட்டால், நுரையீரல் பாதையிலுள்ள தொற்றுகள் அகலும்.

பால்சுறா, சுறா இந்த 2 கருவாடுகளிலும் கூடுதல் மருத்துவ நன்மைகள் உள்ளன.. பெண்களுக்கு இந்த கருவாடு நிறைய பலன்களை தருகிறது.. மாதவிலக்கு நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.. உடலிலும் பலவீனங்கள் ஏற்படும்.. இதுபோன்ற நேரங்களில் சுறா கருவாடு கைகொடுக்கிறது.. இதில் திருக்கை கருவாடு, பெண்களுக்கு மிகவும் பயன்தரத்தக்கது.. நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரி செய்வதில் முதன்மையானது..
மீன்களில் பெரும்பாலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறையவே உள்ளன என்றாலும், அயிரை மீனில் மட்டும் ஒமேகா 6 என்ற கொழுப்புச்சத்து அபரிமிதமாக உள்ளது.. இந்த அயிரை மீன்கள் எப்போதுமே நல்ல தண்ணீரில் வளரக்கூடியது... கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால்தான், பலராலும் சாப்பிடக்கூடிய மீனாக உள்ளது.

மதுரையில் இந்த மீன் மிகவும் ஃபேமஸ்.. பல மாவட்டங்களில் மதிய நேரத்தில் அயிரை மீன் குழம்பு கிடைக்கிறது என்றால், மதுரை ஓட்டல்களில் மட்டும் இரவு நேரத்திலும், சுடச்சுட இட்லியும், அயிரை மீன் குழம்பும் கிடைக்குமாம்.. அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள ருசிபோல, இந்த அயிரை மீன் குழம்பு வேறெங்கிலும் ருசியை தந்ததில்லை..

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இந்த அயிரை மீன்களுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறதாம். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் அயிரை மீன்கள் பதப்படுத்தப்பட்டு, கருவாடாக விற்கப்படுகிறது. சளி, இருமல், கக்குவான் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக அயிரை மீன் கருவாடு பயன்படுகின்றனவாம்..

அதிலும், மேட்டூர் அணையில் நன்னீரில் வளரும் அயிரை மீன்கள், தேவைக்குஅதிகமாக பிடிக்கப்படுவதால் அவற்றை வெயிலில் வைத்து பதப்படுத்தி கருவாடாக மாற்றம் செய்து, வெளி மாவட்டங்களில் ராமநாதபுரம், பரமக்குடி, இளையான்குடி, பட்டுக்கோட்டை, தேவகோட்டை பகுதியில் கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறார்கள்.. அதனால்தான் தென்மாவட்டங்களில் அயிலை மீன், மற்றும் அயிலை கருவாடுகளுக்கு மவுசு அதிகமாகவே உள்ளன.

இந்த மீனை குழம்பு மட்டுமே செய்யலாமே தவிர, எண்ணெய்யில் டீப் ஃப்ரை செய்து சாப்பிடக்கூடாது. குழம்பு வைத்தாலும்கூட, அதிகமாக சூடாக்கி வேகவைத்தால், இதிலுள்ள சத்துக்கள் குறைந்துவிடுமாம். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய இந்த மீனில் குழம்பைவிட, கருவாடு கூடுதல் சத்துக்களை தருகின்றனவாம்.

ஆனால், அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் இருக்கிறது.. புரதம் தவிர,

கருவாடுகள் பெரும்பாலும் உப்பில் ஊற வைத்துதான் தயாரிக்கப்படுகின்றன.. இதை சாப்பிடும்போது, கர்ப்பிணிகளுக்கு வயிற்று அழற்சி, செரிமானமின்மை ஏற்படும்.. அதிலும், கர்ப்பகால ரத்த அழுத்த உள்ள பெண்களுக்கு, இது கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.. சர்க்கரை நோய் உள்ள பெண்களும், கர்ப்ப காலத்தில் கருவாடு தவிர்த்தே ஆக வேண்டும்.

கத்தரிக்காய்: சிலர் கருவாடு, கத்தரிக்காய் இரண்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.. கருவுற்ற பெண்கள் மருத்துவ ஆலோசனையை பெற்றே கத்தரிக்காயை சாப்பிட வேண்டும்.. கத்தரிக்காய் சத்துக்கள் அதிகமாக காணப்பட்டாலும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். இதில் கருவாடையும் சேர்க்கும்போது, கூடுதல் பாதிப்பை தரலாம்.

ஆனால், அதேசமயம், நீர்ப்பை, சினைப்பை, கர்ப்பப்பை பிரச்சனைகளை சரிசெய்ய இந்த கருவாடு பெரிதும் உவுகிறது.. அதனால், மருத்துவர்களின் அறிவுரையின்பேரில், சிலவகையான கருவாடுகளை பெண்கள் சாப்பிடலாம். அதேசமயம், சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதை அளவுடன் சாப்பிடலாம்.

தாய்ப்பால் சுரக்க: பிரசவ காலத்திலும், தாய்ப்பால் சுரக்கவும், பெண்களுக்கு நெத்திலி மீன் கட்டாயம் தரவேண்டும் என்பார்கள்.. ராமேசுவரம் பகுதிகளில் காணப்படும் நெத்திலி மீன் எல்லா மீன்களையும் விட, உடல் மிக மெல்லியதாக இருக்குமாம்.. இந்த மீனின் மேல் பகுதியில், பச்சை நிற கோடும், கீழ்பகுதியில் சிவப்புநிற கோடும் இருக்கும்.. கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்தபிறகு, தாய்ப்பால் ஊறவும் பாரம்பரியமாக இந்த மீன் சமைத்து தரப்படுகிறது..

சர்க்கரை நோயாளிகள், இதயநோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், கருவாடு பக்கமே போகாமல் இருப்பது நல்லது. கருவாடு சாப்பிட்டதுமே தயிர், பால், கீரை வகைகள், போன்றவற்றை சாப்பிடவும் கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+