உளவுத்துறை இன்னும் திமுக கையில் இருக்கிறதா? விஜய்யை அதிர வைத்த ரிப்போர்ட் கசிவு! கருப்பு ஆடு யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசை உலுக்கும் விதமாக ஒரு சம்பவம் உளவுத்துறை அளவில் நடந்து வருகிறதாம். ஆளும் தவெக தரப்பின் உளவுத்துறை தகவல்கள் பல அப்படியே கசிந்து திமுக பக்கம் செல்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழக வெற்றி கழகம்சட்டசபை தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அக்கட்சிக்கு பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளதாம். தற்போது தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கசியும் ஒரு செய்தி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கத் தொடங்கியுள்ளது.

DMK

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரியணையில் அமர்ந்திருந்தாலும், மாநிலத்தின் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்கள் இன்னும் எதிர்க்கட்சியான திமுகவின் கரங்களுக்குச் சென்று கொண்டிருப்பதாகத் தற்போதைய ஆளுங்கட்சித் தரப்பில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

திமுகவிற்குப் போகும் தகவல்கள்!

பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, உளவுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். ஆனால், பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுகவிற்கு, தற்போதைய அரசு நிர்வாகத்திலும் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் இன்னும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பல அதிகாரிகள் திமுகவிற்கு மிக நெருக்கம் , விசுவாசம். தவெக அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள், ரகசிய ஆலோசனைகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த உளவுத்துறை அறிக்கைகளின் நகல்கள் அல்லது அதன் சாரம்சம், அரசுக்குத் தெரியும் முன்பே திமுகவின் முக்கியத் தலைவர்களின் மேஜைக்குச் சென்று விடுவதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்ததால், உளவுத்துறையின் கட்டமைப்பு மற்றும் அதில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் யார் என்பது அவர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும்.

லோக்கல் அளவில் ஐபி அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அதோடு இது போன்ற ரிபோர்டுகளை எழுதும் கன்டென்ட் ரைட்டர்கள் பலர் இன்னமும் திமுக விசுவாசிகள்தான். தற்போது ஆட்சி மாறினாலும், பழைய பாசத்திலோ அல்லது வேறு சில காரணங்களாலோ சில அதிகாரிகள் இன்னும் திமுக தலைமையுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்களிலேயே கிசுகிசுக்கப்படுகிறது.

கருப்பு ஆடு யார்?

இந்த விவகாரம் தவெகவின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தின் மிக ரகசியமான தகவல்கள் எவ்வாறு வெளியே கசிகின்றன, தங்களுக்கு வர வேண்டிய உளவுத்துறை தகவல்கள் எப்படி எதிர்க்கட்சிக்கு முன்கூட்டியே கிடைக்கின்றன என்பது குறித்து தவெக தலைவர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

நமது அரசுக்குள்ளேயே இருக்கும் அந்த கருப்பு ஆடு யார்? என்று தவெகவின் முக்கிய நிர்வாகிகள் தங்களுக்குள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதிகாரிகள் மத்தியில் இருக்கும் இந்த இரட்டை விசுவாசம் தவெகவின் புதிய திட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்கூட்டியே எதிர்க்கட்சிகளுக்குக் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற அச்சம் தவெக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

தவெக புதிய நிர்வாகம்

தமிழக வெற்றி கழகம் என்பது அரசியலுக்கும், குறிப்பாக அரசு நிர்வாகத்திற்கும் முற்றிலும் புதிய ஒரு கட்சியாகும். தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், கோட்டைக்குள் இருக்கும் அதிகார வர்க்கத்தை எப்படிக் கையாள்வது, உளவுத்துறையை எப்படி கட்டுப்படுத்தி முழுமையாகக் கண்காணிப்பது என்பதில் தவெகவிற்குப் போதிய அனுபவம் இல்லை என்பதே தற்போதைய யதார்த்த நிலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+