ஆஹா.. கிளம்பிட்டாங்களே! அலறுது அறிவாலயம்! தவெக வலையில் சிக்கிய திமிங்கலங்கள்! அவரும் போறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் தாவி வருவது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள அதே நேரத்தில், திமுக தலைமையும் அதிர்ச்சியில் தான் இருக்கிறது. காரணம் சென்னையில் முக்கிய நிர்வாகிகளாக கருதப்பட்ட ஆயிரம் விளக்கு ரவி, முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், திருவள்ளூர் குமரன், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 10 முதல் 15 சீட்டுகள் கிடைத்தாலே பெரிய விஷயம்தான் என விஜய்யை குறைத்து மதிப்பிட்ட நிலையில் 108 தொகுதிகளை வென்று தமிழகத்தின் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக.

DMK TVK aiadmk

ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்கவில்லை என விஜய் அலைக்கழிக்கப்பட்டாலும், தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்துள்ளார்.

தவெக

ஆட்சி அமைத்த பிறகு விஜய்க்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த மதிமுக விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எம்எல்ஏக்கள் இல்லாவிட்டாலும் மேலும் சில கட்சிகளும் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். காரணம் வரும் உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் போட்டியிடலாம் என்பதுதான். அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தல்களில் தங்கள் கட்சியினரை நிற்க வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பும் முடிவில் சில கட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய்

இதனால் வரும் காலங்களில் விஜய்க்கு ஆதரவு அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுகவை மெல்ல மெல்ல சாய்த்து வருகிறது தமிழக வெற்றி கழகம். 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு அந்த கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் கட்சித்தாவி வருவது அதிமுகவை நிலைகுலைய செய்துள்ளது. மறுபுறம் சத்தமில்லாமல் திமுகவில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

கட்சி தாவல்

ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஒன்றிய செயலாளர்கள் சத்தமின்றி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஏராளமான மாவட்ட செயலாளர்கள் தற்போது பணிகளை மேற்கொள்ளாமல் சுணக்கமாக இருக்கின்றனர். அதே நேரத்தில் நகர, பகுதி, வட்ட அளவிலான நிர்வாகிகள், கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதற்கிடையே திமுக குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அறிவாலய வட்டாரங்களை கலங்கச் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர்

அதுமட்டுமல்லாமல் சென்னையின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்பட்ட ஆயிரம் விளக்கு ரவி, சாமுவேல், மகளிர் அணி சௌமியா, முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், திருவள்ளூர் குமரன் உள்ளிட்டோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய பேசி வருவதாக வெளியாகி உள்ள தகவல் அந்த கட்சி தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அறிவாலயம்

ஏற்கனவே அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி பலர் சென்று வரும் நிலையில் தற்போது திமுகவிலும் இந்த கட்சி தாவல் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது அந்த கட்சி தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+