சனி வக்ர பெயர்ச்சி: தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு.. சனியால் சூப்பர் டூப்பர் லாபம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால்
தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Simmam Sani vakra peyarchi


சனி வக்ர பெயர்ச்சி

அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.


தனுசு

தனுசு ராசி, தனுசு லக்னத்தினருக்கு மிகவும் அற்புதமான அமைப்பு உருவாகியுள்ளது. சனி பகவான் நான்காம் இடத்தில் இருந்தார். இப்போது அவர் வக்ர நிலையில் மூன்றாம் இடத்தில் இருந்து அடுத்த 138 நாட்களுக்கான பலன்களை வழங்குவார். சனி மூன்றாவது இடத்தில் இருப்பது நல்ல பலன்களை கொடுக்கும். சனி, செவ்வாய் மூன்று, ஆறு, ஒன்பதாம் இடங்களுக்கு வந்தால் முடிசூடா சக்ரவர்த்தி என்றழைப்பார்கள். நீங்களே எதிர்பாராதளவுக்கு வெற்றிகள் குவியும்.

வெற்றி

அடுத்தடுத்து வெற்றிகள் வந்து குவியும். எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வியே தெரியாதளவுக்கு ஜெயம் உண்டாகும். போட்டி பொறாமையின்றி எளிதாக வெற்றி பெறுவீர்கள். மனதில் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். உழைப்பு, சம்பாதிப்பு எல்வாற்றையும் தெளிவாக திட்டமிட்டு சாதிப்பீர்கள். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பீர்கள். உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்களால் பலனடைவீர்கள். உங்களால் அவர்களுக்கும் ஆதாயமுண்டு.

முன்னேற்றம்

உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இட மாற்றம் நிச்சயம் உண்டு. வெளி மாநில, வெளி நாடு வாய்ப்புகள் நிச்சயம் வரும். பண வரவு அதிகரிக்கும். வீண் விரயங்கள் குறையும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கடன் சுமை வெகுவாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும். கவலைப்பட எதுவுமில்லை.

குலதெய்வ வழிபாடு

பெற்றோர் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். தாய் வழி உறவுகளில் கூடுதல் கவனம் தேவை. குழந்தைள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. குல தெய்வ வழிபாடு அற்புதமான பலன்களை கொடுக்கும். இந்த 138 நாட்களில் ஒருமுறையாவது குடும்பத்தினருடன் குல தெய்வ கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+