எதே ரூ.40.15 கோடியா? ஐதராபாத், மும்பை கிட்ட என்ன இவ்வளவு பணம் இருக்கு! CSKக்கு இந்த முறை ஆப்பு தானா?
சென்னை: சிஎஸ்கே அணியை விடவும் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகளிடம் அதிக தொகை மீதம் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் ஏற்கனவே பிளேயிங் லெவனை செட் செய்துவிட்ட சூழலில், ரூ.30 கோடிக்கும் அதிகமான தொகையுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான ரிடென்ஷன் பட்டியலை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன. ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாகவே சில அணிகள் தங்களின் பிளேயிங் லெவனை செட்டில் செய்துவிட்டது. குறிப்பாக ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் பிளேயிங் லெவன் சிறப்பாக கட்டமைத்துவிட்டன.

இந்த நிலையில் மும்பை அணி போல்ட், தீபக் சஹர், அல்லா கசன்ஃபர் உள்ளிட்ட 13 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்துவிட்டு அர்ஷ்தீப் சிங்கை கைப்பற்றியுள்ளது. இதனால் மும்பை அணி 16 வீரர்கள் இருக்கின்றனர். இதனால் 9 வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 2 வெளிநாட்டு வீரர்கள், 7 இந்திய வீரர்களை வாங்க மும்பை அணி ரூ.32.60 கோடி கைவசம் வைத்துள்ளது.
அதேபோல் ஐதராபாத் அணியை பொறுத்தவரை டிராவிஸ் ஹெட், மதுஷங்கா, கமிண்டு மெண்டிஸ், டேவிட் பெய்ன் உள்ளிட்ட 10 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் நேதன் எல்லீஸ், கலீல் அஹ்மத் உள்ளிட்ட இரு வீரர்களையும் டிரேட் மூலமாக கைப்பற்றியுள்ளது. இதனால் ஐதராபாத் அணி வசம் 18 வீரர்கள் இருக்கின்றனர்.
3 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 4 இந்திய வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் அணி உள்ளது. இதற்காக ரூ.35.15 கோடி கைவசம் வைத்துள்ளது. ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் ரூ.5 கோடி கூடுதலாக அளிக்கப்படும். இதனால் மும்பை அணியிடம் ரூ.37.60 கோடியும், ஐதராபாத் அணியிடம் ரூ.40.15 கோடியும் கையிருப்பில் இருக்கும்.
ஆனால் சிஎஸ்கே அணி வசம் ரூ.33.05 கோடி மட்டுமே கையிருப்பில் வைத்துள்ளது. சிஎஸ்கே அணி 6 வீரர்களை மட்டுமே வாங்க வேண்டும். ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் ஏற்கனவே பிளேயிங் லெவனை செட் செய்துவிட்ட சூழலில், சிஎஸ்கே அணி இன்னும் பிளேயிங் லெவனை கூட செட் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் இந்த மினி ஏலமும் சிஎஸ்கே அணிக்கு கடினமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
