அக்கு அக்கா உதிருதா முடி.. இஞ்சி இருக்கா? அப்ப இந்த சூப்பர் டிப்ஸை பாருங்க..கருகருன்னு தலைமுடி வரும்
சென்னை: தலைமுடி உதிர்தல் பெரும்பிரச்சனையாக இருந்து வரும்நிலையில், ஒருசில டிப்ஸ்களை நாம் கையாண்டால், முடி உதிர்தலை வெகுவாக குறைக்கலாம்.. தலைமுடியும் வளர துவங்கும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் சூடு செய்து தலையில் தேய்த்து வந்தாலே, தலைமுடியின் வேர் உறுதியாகும்.. முடி உதிர்வும் கட்டுக்குள் வரும். தேங்காய்ப்பால் எடுத்து காயவைத்து வெட்டிவேர், வெள்ளைமிளகு இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து வந்தாலும் முடி கொட்டுவது உடனடியாக நிற்க துவங்கும்.

நெல்லிக் காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும். முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தாலும், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும்.
வெந்தயம்: வறண்ட தலைமுடி இருப்பவர்கள், நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளித்து வரலாம். இதனால் தலைமுடி மென்மையாகும்.. கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். அல்லது ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய்யை எழுத்து, தலைக்கு மசாஜ் செய்தாலும், பலன் கிடைக்கும்.
வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டுமே உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் பெஸ்ட் மருந்தாகிறது. இந்த இரண்டையுமே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தை போட்டு, நல்லெண்ணெய்யும் விட்டு, மொத்தமாக சூடு செய்ய வேண்டும்.. நுரை பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம்.
வெள்ளைப்பூண்டு: இரவு தூங்க செல்லும்போது, தலைக்கு தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் குளித்தால் தலைமுடி உதிராது.. கேசமும் ஆரோக்கியமாகும். வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்ப்பதால், ஒருவித வாடை வந்தாலும், தலைமுடிக்கு ஆரோக்கியமான எண்ணெய் கிடைக்கும்.
அல்லது செம்பருத்தி இலைகளையும், வேப்பிலைகளையும் சமபங்காக அரைத்து, துணியில் கட்டி பிழிந்து கொள்ள வேண்டும். அந்த சாற்றினை தலையில் தேயத்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால்,தலைமுடி உதிர்வது நிற்கும்.
சூப்பர் ஆயில்: அல்லது வீட்டிலேயே ஒரு சூப்பரான எண்ணெய் தயாரிக்கலாம். இதற்கு ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த மூன்றையும் தலா 100 மி.லி. எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் 50 சொட்டு ரோஸ் மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பிரஞ்சி இலை ஆயில் (பே ஆயில்), சிடர்வுட் ஆயில் போன்றவற்றையும் கலந்து, மொத்தத்தையம் அப்படியே 1 வாரத்துக்கு வைத்து விட வேண்டும்.
1 வாரம் கழித்து இந்த எண்ணெய்யை தினமும் இரவில் தடவி, மறுநாள் காலையில் குளித்து வந்தாலே தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. தலைமுடியும் கருகருவென வளரும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications