முடவன்+ ஆட்டும் கால்= முடவாட்டுக்கால் கிழங்கு.. மூட்டுவலியால் முடங்கியோரை எழுந்து ஓட வைக்கும்!
சென்னை: மூட்டுவலியால் முடங்கி கிடக்கிறீர்களா, உங்களுக்கான அருமையான தீர்வுதான் முடவாட்டுக்கால் கிழங்கு. மூட்டு வலி வராமல் தடுக்க அனைவரும் இந்த கிழங்கின் சூப்பை குடிக்கலாம் என்கிறார்கள்.
30 அல்லது 35 வயதானதும் பொதுவாக எல்லாரும் சொல்வது மூட்டுவலியைத்தான். அன்று கோல் ஊன்றாத பாட்டிகளை எல்லாம் பார்த்துள்ளோம். ஆனால் இன்று நடுத்தர வயதிலேயே மூட்டு வலி வந்து பலரை முடக்கி போட்டுவிடுகிறது.

இதற்கு தீர்வு காண எத்தனை வைத்தியங்கள் செய்தும் பலருக்கு பலன் கிடைப்பதில்லை. இதனால் மாடி படி ஏற முடியாமலும் சில தூரம் கூட நடக்க முடியாமலும் சம்மணம் போட்டு உட்கார முடியாமலும் முடங்கி கிடக்கிறார்கள்.
அவர்களுக்கான அற்புதமான ஒரு கிழங்கு குறித்துதான் இன்று நாம் பார்க்க போகிறோம். முடவாட்டுக்கால் கிழங்குதான்... இதை சைவ ஆட்டுக்கால் என்கிறார்கள். அதாவது ஆட்டுக்கால் சூப் குடித்தால் எத்தனை நன்மைகளோ அத்தனை நன்மைகள் வந்து சேரும். இது பாறைகளுக்கு இடையே வளரக் கூடிய தாவரம் ஆகும். மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும்.
இது தமிழகத்தில் கொல்லிமலையிலும், சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது. இதற்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக் கூடிய இந்த கிழங்குகள் செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை விரட்ட சித்தர்கள் இதை 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தனர்.
இந்த கிழங்கு ஒரு கிலோ ரூ 300 க்கு விற்பனையாகிறது. இதை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். குழந்தைகளின் வாத நோய்க்கு இது அருமருந்து. கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த கிழங்கின் சூப் வைத்துக் குடிக்கலாம்.

மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசை பிடிப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்த கிழக்கு அற்புதமான மருந்து. கர்ப்பப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு நல்ல மரு்து. முடவாட்டுக்கால் கிழங்கை போட்டு குழந்தையை குளிக்க வைத்தால் வாத நோய் நீங்கும்.
இந்த கிழங்கில் உள்ள முடி போன்ற தோலை எடுத்து சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் தோல் அலர்ஜி, தேம்பல், அரிப்பு போன்றவை நீங்கும். ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் மக்கள் இந்த முடவாட்டுக்கால் சூப்பை வாங்கி குடிக்கிறார்கள். அருவிக்கு சென்றுவிட்டு வருவோர் இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்கிறார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications