சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க
சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடியது பருப்பு வகைகளாகும்.. காரணம், பருப்புகளில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு என்பதுடன், நார்ச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. இவைகள் இரண்டுமே ரத்த சர்க்கரை அளவை அதிகமாக பாதிக்காது...
விதைகள்: இவைகளுடன் விதைகள், கீரைகளை உணவில் சேர்த்து கொள்ளும்போது, வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள், இரும்புச்சத்துக்கள் என அனைத்துமே சேர்ந்தும் கிடைத்துவிடுகிறது.

வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைவிட, பீன்ஸ், கோஸ், அருகம்புல் போன்ற நிறைய நார்ச்சத்தும், தாதுக்களும் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றையும், முட்டை, பால் பொருட்கள், சிக்கன், மீன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
பழங்கள்: பழங்களை பொறுத்தவரை, அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. குறிப்பாக, ஒரு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு 70 முதல் 100 வரை இருந்தால், அந்த பழங்களில் நிறைய சர்க்கரை அளவு உள்ளது என்று பொருள். இது காய்கறிகளுக்கும் பொருந்தும்.. எனவே, கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை தவிர்த்துவிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு, நெல்லிக்காயைவிட சிறந்த பழம் வேறில்லை.. வைட்டமின் C, நார்சத்துக்கள் அதிகம் உள்ள பழம் இதுவாகும்.. இதற்கு அடுத்தபடியாக, அதிக சத்துள்ள கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அதேபோலஆரஞ்சு, திராட்சை பழங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கக்கூடியது.. பப்பாளியில் சர்க்கரையின் அளவு என்பதால் தாராளமாக சாப்பிடலாம்..
மாதுளம்பழங்கள், ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. ஆப்பிள் பழங்கள், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. தர்பூசணிகள், உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன.
தவிர்க்க வேண்டியது: உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம், மாம்பழம், போன்ற இனிப்பு பழங்களை தவிர்க்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகளை தவிர்க்கலாம்.
ஆனால், கிவி பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இந்த பழத்தில் வைட்டமின் A, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரையின் அளவை குறைக்க, பெர்ரீ பழங்கள் அபரிமிதமாகவே உதவுவதால், இதை தைரியமாகவே சாப்பிடலாம்.
பொட்டாசியம்: அதேபோல, ஆரஞ்சு பழம், கிட்டத்தட்ட ஒரு மருந்துபோலவே, சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின் C, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயிலிருந்து விடுபட பெரிதும் துணைபுரிவது, இந்த ஒரு பழமாகத்தான் இருக்க முடியும்.
அவகடோ பழங்களை பொறுத்தவரை, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவையாகும்.. ஏகப்பட்ட வைட்டமின்களும், தாதுக்களும் இந்த பழத்தில் உள்ளதுடன், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், நீரிழிவு அபாயத்தை இந்த அவகேடோ பழங்கள் குறைப்பதாக சொல்கிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications