கல்லீரலை கிளீன் செய்யணுமா? இந்த 3 சூப்பர் ஜூஸ்கள் போதும்.. வீட்டிலே கொத்தமல்லி, இஞ்சி இருக்கா? செம்ம

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய கல்லீரலின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டுமானால், உணவில் கவனம் செலுத்தினாலே போதும்.. குறிப்பாக 3 வகையான ஜூஸ்கள், கல்லீரலின் ஆரோக்கியத்தை காக்கின்றன.

உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வதே இந்த கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..

Do you know the Health Benefits of Orange Juice and Which is the Best Healthy Juice to protect the Liver

கல்லீரல்: ஆனால், கல்லீரலை பொறுத்தவரை, எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும்.. அதனால்தான், பேராபத்து என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி, கல்லீரலை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வதுதான்.
இதற்கு நாம் உண்ணும் உணவில் சற்று கூடுதலான கவனத்தை செலுத்தினாலே போதும். ஆல்கஹால், சிவப்பு இறைச்சி, அதிக உப்பு இந்த மூன்றையும் தவிர்த்தாலே போதும்.. கல்லீரல் காப்பாற்றப்பட்டுவிடும். உப்பில் சோடியம் அதிகமுள்ளதால், உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது.. கல்லீரலில் வீக்கம் வர முதன்மை காரணமே இதுதான்..

எண்ணெய் உணவு: இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவை தவிர்க்கலாம்.. மொத்தத்தில், உப்பு + சர்க்கரை இது ரெண்டுமே கல்லீரலுக்கு பகைதான்.

எனவே, கல்லீரலை பாதுகாக்க, திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள், இவைகளை எல்லாம் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற புரதப்பொருட்களையும் தவிர்க்க கூடாது.

ஜூஸ்கள்: பழங்களில் வைட்டமின் C நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, மற்றும் ஆப்பிள், ஆப்பிள் சீடர் வினிகர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில், கல்லீரலை காக்கும் 3 வகையான ஜூஸ்களை பற்றி பார்ப்போம்.

முதலில், நெல்லிக்காய்.. இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிட்டாலும் சரி, அல்லது ஜூஸ் தயாரித்து குடித்தாலும் சரி, கல்லீரலை சுற்றியுள்ள நச்சுக்கள் கரைந்து வெளியேறும்.

பீட்ரூட் ஜூஸ்: அடுத்து, பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.. இதை பச்சையாகவே ஜூஸ் போட்டு குடித்தால் அதிக நன்மை கிடைக்குமாம். இதனால், ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் வீக்கத்திலிருந்து கல்லீரலை பாதுகாக்க முடியும். வெறுமனே பீட்ரூட் ஜூஸ் குடித்தால் சிலருக்கு குமட்டல் வரலாம்.. வேண்டுமானால், அத்துடன், வெள்ளரிக்காய், கேரட், கீரை அல்லது பார்சிலி சேர்த்துக்கூட தயாரிக்கலாம்.

அதேபோல, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்.. இதில் அரை ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து குடித்தால், கல்லீரல் பைப்ரோஸிஸிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்..

அதேபோல, ஒரு பாத்திரத்தில், ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து, பிறகு மிக்சியில், இந்த கொத்தமல்லி + நான்கு பல் பூண்டு, சிறிது கல் உப்பு, தண்ணீர் சேர்த்து ஜூஸ் போல அரைத்து கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சம் சாறு கலந்து, வெறும் வயிற்றில் 3 நாட்கள் குடித்தால் போதும், கல்லீரலில் உள்ள நச்சுக்கள், தொற்றுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

திராட்சைப்பழம்: அதேபோல, திராட்சைப்பழத்திலும் நிறைய நார்ச்சத்து உள்ளதால், கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.. திராட்சையில் உள்ள நாரின்ஜெனின் (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க பெரிதும் துணைபுரிகிறது என்பதை மறுக்க முடியாது. முள்ளங்கியிலும் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+