Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ருனு ஏறுதா வெயிட்? மாதவிடாய் நேரத்துல "இந்த" 4 பொருளையும் தொடாதீங்க.. செம டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு, மாதவிடாய் வலியை தூண்டும் சில உணவுகள் என்னென்ன? வலி மற்றும் சோர்விலிருந்து விடுபட உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மாதவிடாய் மிக முக்கியமான பகுதியாகும்.. ஒரு பெண் பொதுவாக மாதவிடாய் காலத்தில் வலி, சோர்வுகளை அனுபவிக்க நேர்கிறது.. அத்துடன் ஒருவித இறுக்கத்திலும், மன அழுத்தத்தையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

Do you know the Health Benefits of Turmeric and What are the Best foods that women should eat during menstruation

இதுபோன்ற நேரங்களில், வலியை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும், சீரான உணவு அவசியமாகிறது.. இல்லாவிட்டால், மனநிலையை மேலும் அதிகமாக பாதித்து, வேறு சில மாற்றங்களைக் கொண்டுவந்து விட்டுவிடக்கூடும்..

நொறுக்கு தீனிகள்: மாதவிடாய் என்பது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை பெண்களுக்குள் ஏற்படுத்தக்கூடியது.. இதுபோன்ற நேரங்களில் சில பெண்கள் எரிச்சல் மனநிலையுடனும், சில பெண்கள் அமைதியாகவும், சில பெண்கள் பதற்றத்துடனும் காணப்படுகிறார்கள்.. ஆனால், பல பெண்கள், விருப்பமான உணவுகளின் மூலம் தங்கள் அசௌகரியத்தை போக்க முயற்சி செய்கிறார்களாம்..

மாதவிடாய் காலம் என்றாலே, பெண்கள் சரியாக சாப்பிடுவதில்லை.. அல்லது வழக்கத்துக்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள் அல்லது பிடிக்காத உணவையும், அதிகமாக சாப்பிடுகிறார்கள்.. இதனால், மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முடியாமலேயே போய்விடுவதாக சொல்கிறார்கள்.

ஆரோக்கியம்: நொறுக்கு தீனிகளை அதிகமாக சாப்பிட்டால், உடலில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, பிஎம்ஐ பிரச்சனையில் கொண்டுவந்துவிட்டுவிடும். அதிகமாக எண்ணெய் அயிட்டங்கள் சாப்பிடுவது, உடல் பருமன், ஒரே இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது, போதிய தூக்கமின்மை, அதிக அழுத்தங்கள் போன்றவை பிஎம்எஸ் வீரியத்தை அதிகரிக்கும்..

மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் சில நாட்கள், பொரித்த உணவு வகைகள், அதிகம் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை குறைத்தால், வயிறு உப்புவது , மார்பகங்கள் கனப்பது போன்றவற்றை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக, நார்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழவகைகள், சிறுதானியம் உள்ள உணவு வகைகள் அதிகமாக சாப்பிட வேண்டும். காபி, டீ, கூல்டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்..

தவிர்க்கலாம்: புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த பருப்புகள் வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.. இவைகள் அதிகமான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, அதை ஈடு செய்ய உதவும்.. மாதவிடாய் சமயத்தில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது இயல்பானது என்றாலும், யோகர்ட், தயிர் சாப்பிடுவதால், இந்த பிரச்சனை எளிதாக நீங்கும்.. நட்ஸ், மக்காச்சோளம், டார்க் சாக்லேட், வாழைப்பழம், சோம்பு, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை, மாதவிடாயின் 5 நாட்களுக்கு முன்பு எடுத்துக்கொள்வது உடலுக்கும் நல்லது.

முக்கியமாக, இஞ்சி, மஞ்சள் இவை இரண்டையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். மாதவிடாய் அதிகமாக இருந்தால், காலையும், மாலையும், சூடான இஞ்சி டீயை குடிக்கலாம்.. இது வலியை உண்டாக்கும், வயிற்று தசைப்பிடிப்புகளை குறைக்க உதவும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தாலும், இந்த இஞ்சி டீயை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்..

மஞ்சள்: கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சளில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியை குறைக்க உதவும். மஞ்சளில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் பண்புகள் கொண்டதுடன், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+