வசம்பு ரகசியம்.. கைவசம் வசம்பு இருக்கா? நலனை வசியப்படுத்தும் வாசம்.. இப்படியும் உதவும் வசம்பு தூள்
சென்னை: வாசமுள்ள வசம்புவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? கைக்குழந்தைகளுக்கு உதவக்கூடியது என்பதால்தான், இதனை பிள்ளை வளர்த்தி என்றே சொல்கிறார்கள்.
தங்கள் குழந்தைகள் எந்த நோய் நொடியில்லாமல் இருப்பதற்காக இந்த வசம்பை கோர்த்து பிறந்த குழந்தைகளின் கைகளில் கட்டுவது உண்டு. இந்த வசம்பானது வசம்பு வேரானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது.

- எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கிவிடும் இந்த வசம்பு - வசம்பு தூளை 3 ஸ்பூன் தந்தாலே போதும், விஷம் வெளியே வந்துவிடும்.
- எப்பேர்ப்பட்ட தொற்று நோய்களையும் விலக செய்துவிடும் இந்த வசம்பு.. வசம்பு தூள் செய்து 2 டீஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டாலே போதும்
- குழந்தைகளுக்கு அஜீரணம், வயிற்று வலி, வாயுத்தொல்லை, அசெளகரியம், நெஞ்சு சளியை போக்குகிறது இந்த வசம்பு
- வயிறு வீக்கம், வயிறு உப்புசம் பிரச்சனைகளுக்கு வசம்பை தீயில் சுட்டு தூளாக்கி, தேனில் குழைத்து கொடுக்கலாம்
- வசம்புவை சுட்டு அந்த பொடியை குழந்தைகளுக்கு பூசினால், பால் வாடைக்கு பூச்சுக்கள் குழந்தையை அண்டாது
- இருமல் அதிகமாக இருந்தால், வசம்பு பொடியுடன், அதிமதுர பொடி சேர்த்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்
- குளிர்ச்சி அதிகமாக இருந்தால், வசம்பினை ஒரு கல்லில் வைத்து உரசி, அதை வழித்து எடுத்து, தாய்ப்பாலுடன் கலந்து தருவார்கள்.. அல்லது தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு தருவார்கள்..
- குழந்தைகளுக்கு பேச்சு வருவது தாமதமானால், அல்லது பேச்சுத்திறன் அதிகரிக்க வேண்டுமானால், இந்த வசம்பினை நாக்கில் வைத்து தேய்ப்பார்கள்.. இதனால், குழந்தைக்கு ஏதாவது அலர்ஜி இருந்தாலும் நீங்கிவிடும்.
- குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், கூர்மையான பார்வை திறனுக்கும் இந்த வசம்பு உதவுகிறது.
- குழந்தைகளுக்கு பசியின்மை இருந்தாலும், இந்த வசம்புவை உள்ளுக்குள் மருந்தாக தருவார்கள்..
- குழந்தைகளை தூங்க வைத்தபிறகு, அந்த அறையை சுற்றிலும், வசம்பு பொடியையும் ஆங்காங்கே தூவி வைப்பதால், பூச்சிகள் முதல் நுண்ணுயிரிகள் நுழைவது தடுத்து நிறுத்தப்படும்.
- குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, அந்த தண்ணீரில் வசம்பு பொடியை கலந்து பயன்படுத்தலாம்.
- பொடுகு தொல்லைக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் வசம்பு பொடி உதவுகிறது.. மிகச்சிறந்த கிருமி நாசினியான இந்த வசம்பு, ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்கக்கூடிய அற்புதமான மூலிகை பொருளாகும்.












Click it and Unblock the Notifications