பனங்கிழங்கில் கொட்டி கிடக்கும் பலன்.. இம்யூனிட்டி தரும் பழங்கள்.. நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்
சென்னை: நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன தெரியுமா? இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு தரக்கூடிய உணவு வகைகள் என்னென்ன தெரியுமா?
ஒவ்வொரு நாளும் நம்முடைய உடல் பல நோய்க்கிருமிகளுடன் தொடர்பு கொள்கிறது.. ஆனாலும், இவைகளில் ஒரு சில மட்டுமே நோய்களாக உருமாறுகின்றன.. காரணம், நம்முடைய உடலுக்கு இந்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக ஆன்டிபாடிகளை வெளியிடும் திறன் உள்ளது.. அத்துடன், நம்முடைய உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த பாதுகாப்பு முறைக்குதான், நோய் எதிர்ப்பு சக்தி என்று பெயர்.

வெள்ளை பூண்டு: இந்த நோய் எதிர்ப்பு சக்திகள், நமக்கு நாம் உண்ணும் உணவிலிருந்தே கிடைக்கின்றன. குறிப்பாக, பூண்டு எடுத்து கொண்டால், எதிர்ப்பு சக்தி அதிகமாக நிறைந்திருக்கிறது.. அல்லிசின் என்ற பொருள் பூண்டில் உள்ளதால், பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொன்றுவிடுகிறது.
இஞ்சியிலும் எதிர்ப்பு சக்திகள் நமக்கு அதிகம் கிடைக்கின்றன.. நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு.. அத்துடன், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் இஞ்சியில் காணப்படுகிறது. தயிரிலும் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. எனவே, செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை சீராக வைத்திருக்க இந்த தயிர் உதவுவதுடன், ஆரோக்கியமான செரிமான மண்டலத்துக்கு எதிர்ப்பு சக்தியை பெருக்கி தருகிறது.
பார்லி, ஓட்ஸ்: பார்லி, ஓட்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.. வைட்டமின் B1, C, A, மற்றும் உலோகச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், கீரைகள், காய்கறிகளில் நிறைய நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன.. இதனால், இவைகள் ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவாக எப்போதுமே கருதப்பட்டு வருகிறது.
பழங்களில் ப்ளூ பெர்ரி, எலுமிச்சம் மற்றும் காய்கறிகளில் காளானை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்துக்கள் இந்த காளானில் அடங்கியிருப்பதுடன், நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு இந்த காளான்கள் உதவுகின்றன.
பனங்கிழங்கு: கிழங்கு வகைகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு, பனங்கிழங்கு நன்மை தரக்கூடியவை.. சர்க்கரை வள்ளிக்கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் A சத்து அதிகம் கொண்டவை.. இதனால், உடலில் தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
வைட்டமின் B, C நிறைந்த பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளன.. அதாவது, 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகளும், 77 கிராம் நீர்ச்சத்தும் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த கிழங்கு பெருக்குகிறது..
கட்டிகள்: ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கக்கூடிய சக்தி இந்த கிழங்குக்கு உண்டு.. ரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுப்பதால், இதய நோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது.. கால்சியம் சத்துக்களும், மெக்னீசியமும் அதிகமாக இந்த பனங்கிழங்கில் உள்ளதால், எலும்புகள் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது.
விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது... பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், இந்த பனங்கிழங்குக்கு பெரும் பங்கு உண்டு.












Click it and Unblock the Notifications