பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே! அற்புதம்! டெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவுக்கு அருமருந்து!
சென்னை: பாரிஜாத பூவை தேவலோகத்து மலர் என அழைப்பது வழக்கம். அப்படி அழைக்கும் இந்த பூவின மருத்துவ குணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
பாரிஜாதப்பூ இதன் இதழ்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் காம்பு பகுதி ஆரஞ்ச் நிறமாக இருக்கும். இந்த பூ வாசனை கொண்டது. இது பூஜைக்கு மட்டும்தான் பயன்படுத்துவர். அவ்வளவாக தலையில் வைத்துக் கொண்டு பார்த்ததில்லை.

மேலும் இந்த பூவுக்கு இரவு மல்லி, பவளமல்லி என்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. இந்த பூவுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பூ மட்டுமல்ல, இதன் மரமும், இலைகளும் அத்தனை மருத்துவ குணங்கள் கொண்டது.
இந்த பூவானது இரவு நேரத்தில் பூக்கக் கூடியது என்பதால்தான் இதை இரவு மல்லி என அழைக்கிறார்கள். இந்த பூவின் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் பிரச்சினைகள் நீங்கிவிடும். இந்த பூவின் மரத்தின் பட்டையையும் இலையையும், பூவையும் கசாயமாக குடித்து வந்தால் மூட்டு வலி பஞ்சாய் பறந்துவிடும்.
அது போல் மன ரீதியிலான பிரச்சினைகளை குணப்படுத்த இந்த பூ பயன்படுகிறது. அரோமாதெரபி என இயற்கை மருத்துவத்தில் சொல்வார்கள். இதன் எண்ணெய்யை பயன்படுத்துவதால் மன அழுத்தமும் பதற்றமும் குறையும். இந்த பூவின் வாசத்தின் மூலம் மூளையில் செராட்டோனின் நன்றாக சுரக்கும். இதனால் மனம் அமைதியாகும்.
அரிப்பு , அலர்ஜிக்கு இந்த பூவினால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை தடவி வந்தால் அவை நீங்கும். இந்த பாரிஜாத பூக்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும். சர்க்கரைநோய்க்கு அருமருந்து. தலைமுடி வளர்ச்சிக்கு இந்த பூக்கள் உதவுகிறது. அது போல் தலையில் முடி உதிர்வையும் தடுத்து பேன், பொடுகு தொல்லைகளை நீக்குகிறது. பவளமல்லியின் தண்டு மலேரியாவுக்கு தீர்வு அளிக்கும்.
பவளமல்லியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் காய்ச்சலை குறைக்கிறது. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களை குணப்படுத்துகிறது. டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலின் போது குறையும் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பல் சம்பந்தமான நோய்களுக்கும் பிரசவ காலத்தில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் இது உதவுகிறது. மேலும் குமட்டலை நீங்கி புழு தொற்றுகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications