சிறுகுறிஞ்சான் இலை.. கொழு கொழு உடலை கரைக்கும் அற்புதம்.. சிறுகுறிஞ்சான் வேர் தரும் நன்மை.. சூப்பர்ல
சென்னை: சர்க்கரை கொல்லி என்று சொல்லப்படும் சிறுகுறிஞ்சான் மூலிகை, நீரிழிவு நோயை விரட்ட உதவுகிறது. அதேசமயம், இந்த சிறுகுறிஞ்சான் வேர்களின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? இந்த வேர்களை மருந்தாக எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
சிறு குறிஞ்சான் இலைகளில், பிசின்கள், அல்புமின், குளோரோபில், கார்போஹைட்ரேட், டார்டாரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், பியூட்ரிக் அமிலம் போன்ற எண்ணற்ற பண்புகள் நிறைந்துள்ளன.. முக்கியமாக, இந்த மூலிகையில் ஜிம்னிமிக் அமிலம்தான், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது பல்வேறு ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு: சர்க்கரை, கொழுப்பை உறிஞ்சுவது தடுக்கப்படுவதால், நீரிழிவு நோயாளிகள் வெறுமனே இந்த இலையை மென்று தின்னலாம். அல்லது டீ போட்டும் குடிக்கலாம்.. கடைகளில் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.. இந்த இலைகளை பவுடர் செய்தும் விற்கிறார்கள்.. ஆனால், உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு இந்த சிறுகுறிஞ்சானை 3 முதல் 5 கிராம் வரை சாப்பிட்டு வந்தாலே சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
இன்சுலின் போடும்போது, இந்த சிறுகுறிஞ்சானையும் சாப்பிட்டால் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். அதனால், டாக்டரின் முறையான ஆலோசனை இல்லாமல், சிறுகுறிஞ்சானை உட்கொள்ளவே கூடாது.
சர்க்கரை நோயாளிகள்: நீரிழிவு நோய்க்கு மட்டுமல்லாமல், வேறு சில நன்மைகளையும் இந்த சிறுகுறிஞ்சான் தருகிறது.. உஷ்ண உடலுள்ளவர்கள், பித்த உடம்பு உள்ளவர்கள் இந்த சிறுகுறிஞ்சானை சூப் போல தயாரித்து குடிக்கலாம்..
இந்த சிறுகுறிஞ்சான் இலைகளை காயவைத்து, பவுடராக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரை, வெறும் சுடுநீரில் கலந்து குடித்தாலே, உடல் குளிர்ச்சி பெறும்.. பித்தம் தணியும்.. இந்த பொடியை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குறைபாடுகள் நீங்கும்.. நரம்புகள் வலிமை பெறும்..
உடல் பருமனை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த சிறுகுறிஞ்சான் பேருதவி புரிகிறது. கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பலப்படுத்துகிறது.. அதனால்தான் மஞ்சள் காமாலை சிகிச்சையில், இந்த இலைகளை மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
இலைகள் பொடி: இந்த இலைகளை கழுவி சுத்தம் செய்து, அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து, இவைகளை கஷாயம் போல வைத்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குறைந்துவிடும்..
இந்த இலைகளில் பிளவனாய்டுகள் நிறைந்துள்ளதால், புற்றுநோயை தடுத்து நிறுத்துகிறது.. பெண்களுக்கு மாதவிலக்கு சரியாக ஏற்படாவிட்டால், ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவு களா இலைகளையும் சேர்த்து, விழுதாக அரைத்து, தினமும் 2 வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு குறைபாடுகள் எளிதில் விலகும்.
அதேபோல, நீர்க்கட்டிகள் பிரச்சனை இருந்தால், அவைகளை கரைத்து வெளியேற்றுவதுடன், மாதவிடாயையும் முறைப்படுத்தும் தன்மை இந்த சிறுகுறிஞ்சானுக்கு உண்டு.
சுவாச கோளாறுகள்: சுவாச கோளாறுகள், நுரையீரல் தொற்று உள்ளிட்ட கோளாறுகளை சரிசெய்யவும் இந்த சிறுகுறிஞ்சான வேர்கள் பயன்படுகின்றன.. இந்த சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை + இதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் ஒரு சிட்டிகை + திரிகடகம் சூரணம் ஒரு சிட்டிகை + இந்த மூன்றையும் வாயில் போட்டு, சுடுநீர் குடித்து வர வேண்டும். இப்படி தினமும் 2 வேளை 7 நாட்கள் வரை குடித்து வந்தால், சுவாச கோளாறு, நுரையீரல் கோளாறுகள், சளி, இருமல், கடும் காய்ச்சல் போன்றவை நீங்கிவிடும்,.
நாள்பட்ட இருமல் இருந்தாலும், அதற்கும் இந்த சிறுகுறிஞ்சான் வேர் உபயோகமாகிறது.. சிறுகுறிஞ்சான் வேர் 20 கிராம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து, நசுக்கி கொள்ள வேண்டும்.
வேர்கள்: ஒரு லிட்டர் நீரில் இந்த வேர்களை போட்டு, 100மிலி தண்ணீர் வரும்வரை சுண்ட காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும்.. இதில், 30 மி.லி. அளவுக்கு காலை, மதியம், மாலை என 3 வேளைகளில், ஒரு நாள் மட்டும் குடித்தால், கடுமையான இருமல் கட்டுக்குள் வரும்.
இப்படி பல நன்மைகள் தந்தாலும், பக்கவிளைவுகளையும், சிலருக்கு இதுபோன்ற மூலிகைகள் உண்டாக்கிவிடும் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் உள்ளுக்குள் மருந்தாக எடுக்கவே கூடாது.












Click it and Unblock the Notifications