முளைக்கீரை.. கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி.. ஆச்சரிய அழகு தரும் இலைகள்.. சூப்பர் டிப்ஸ்ஸை கவனிங்க
சென்னை: சரும பாதுகாப்புக்கும், முக அழகுக்கும், தோற்ற பொலிவுக்கும், கீரைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.. அந்தவகையில், நமக்கு உதவும் ஒருசில கீரைகளை பற்றி பார்ப்போம்.
முதலாவதாக, முளைக்கீரையை சொல்லலாம்.. வைட்டமின்கள், தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, 85.7 சதவீதம் நீர்ச்சத்துக்கள், இரும்புச்சத்து , தாமிரச்சத்துக்கள், மணிச்சத்துக்கள் என அத்தனையும் நிறைந்துள்ளன.

தண்டுக்கீரை: இதன் தண்டு + கீரை இவை இரண்டையுமே சேர்த்து சமைக்க வேண்டும் என்பார்கள். அதனால்தான் இதற்கு தண்டுக்கீரை என்றும் பெயர் வந்ததாம். அதாவது முளைக்கீரை வளர்ந்து பெரிதானால், அதுதான் தண்டுக்கீரை.. சிறு சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு, கொதிக்க வைத்து, அந்த சாறை குடித்தாலே உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
முளைக்கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தாலே முகம் அழகு பெறும்.. பொலிவு பெறும்.. அழகு குறிப்பிலும் இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.. முளைக்கீரையில் சாறு எடுத்து, அதனுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால் முகம் பளபளப்பாகிவிடும்.. தோலின் மேற்பகுதி பொலிவாகிவிடும்.. தோல் வியாதிகள் உட்பட சரும பிரச்சனைகளை இந்த கீரை தீர்க்கிறது.
சரும பாதுகாப்பு: அடுத்ததாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம்.. பாசிபருப்புடன் சேர்த்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தாலே, சரும பொலிவு கிடைக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், அழகு மேம்படும். தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தாலோ, அல்லது தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானாலோ, இந்த கீரையை உபயோகிப்பார்கள்..
இந்த கீரையின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதம் வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.. பிறகு அதை வடிகட்டி எடுத்துவைத்து கொண்டு, தலையில் தேய்த்து குளித்து வந்தாலே போதும், தலைமுடி உதிர்வது உடனடியாக நிற்கும்.. உடல் சூடு தணியும்.. கண்களிலுள்ள புகைச்சல் தணியும்.
பார்வை தெளிவு: அதேபோல, இந்த கீரையை நெய்யில் வறுத்து வெள்ளை துணியில் வைத்து கண்களில் வைத்து கட்டினால், கண் பார்வை தெளிவுபெறும்.. இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து குளித்தால், கண்கள் பொலிவுபெறும்..
கறிவேப்பிலை ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முதலில் கறிவேப்பிலை பேஸ்ட்டை தயார் செய்து, அதில் சிறிது முல்தானி மிட்டி மற்றும் தேன் சேர்க்கவும். முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.
3 இலைகள்: அதேபோல, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இந்த 3 இலைகளிலும் துவையல் செய்து சாப்பிடலாம்.. மற்றவகை குழம்புகளிலும், கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அதேபோல, இந்த இலைகளை அரைத்து பேஸ்ட் போல அரைத்து, எலுமிச்சம் சாறு கலந்து, முகத்தில் 25 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வந்தால், முகப்பரு, முக சுருக்கம், கருவளையங்கள், எரிச்சல், அரிப்பு என அத்தனையும் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
வேப்ப இலைகளிலும் நிறைய பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், அந்த இலைகளையும் பேஸ்ட் போல எடுத்து, ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவி கழுவி வரலாம். மொத்தத்தில் கீரைகள், உள்ளுக்குள் மருந்தாகவும், சருமத்துக்கு கவசமாகவும் திகழ்கின்றன.












Click it and Unblock the Notifications