தாம்பரத்தில் புருஷனின் காலை உடைக்க பணம் கொடுத்த மனைவி.. குற்றவாளிக்கும் கால் உடைந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே, நான்கு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி, கணவனின் உயிரைக் காத்து கால்களை மட்டும் உடைத்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். டீன் ஏஜ் பசங்களை தனது சம்பவத்திற்கு பயன்படுத்திய வசந்தா கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்

சென்னை தாம்பரம் அடுத்த வேங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன் (42). இவருக்கும் வசந்தா (40) என்ற பெண்ணுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கவிதரன் (11) என்ற மகன் உள்ளார்.

Vasantha paid 4 lakh to have her husband s leg broken in Tambaram

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்டோவில் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற வசந்தா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கணவர் தாமோதரன் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, வசந்தாவுக்கு ஓர் ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டு, தனது ஐந்து வயதுக் குழந்தையையும் கணவரையும் தவிக்கவிட்டுவிட்டு, அவருடன் ஓடிப்போய் வில்லியம்பாக்கம் அடுத்த ஒரத்தூரில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

தாமோதரன் பலமுறை மனைவி இருக்கும் இடத்திற்கே சென்று, காலில் விழுந்து கதறி வீட்டிற்கு அழைத்தும் வசந்தா வர மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாமோதரன், தனது மகனுடன் வேங்கம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வசந்தா தாமோதரனிடம் வந்து, "என் மகனை என்னிடம் அனுப்பி வை" என்று கேட்டுள்ளார். அதற்குத் தாமோதரன், "எனக்குத் துரோகம் செய்த உன்னோடு என் குழந்தையை அனுப்ப முடியாது" எனத் திட்டவட்டமாகத் திட்டி அனுப்பியுள்ளார்.

பார்சல் தருவது போல் நாடகம்

இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, தாமோதரனைப் பழிவாங்கத் திட்டமிட்டார். இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தாமோதரனின் செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், "நீங்கள் ஆர்டர் செய்த பார்சல் கொண்டு வர வேண்டியுள்ளது, உங்கள் முகவரியைக் கூறுங்கள்" என்று கேட்டுள்ளார். தாமோதரனும் தனது வீட்டு முகவரியைத் தெளிவாகக் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 19.04.2026 அன்று இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் தாமோதரன் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் தன்னிடம் இருந்த பார்சலைப் பிரிப்பது போல நடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தாமோதரனைக் கீழே தள்ளிவிட்டனர். பின்னர், தாராளமாகத் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பேஸ்பால் பேட்டை எடுத்து, தாமோதரனின் வலது காலில் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவரது கால் முறிந்தது.

உடம்பில் பல இடங்களில் ரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் தாக்கியபோது, தாமோதரனின் வயதான தாய் அவர்களைத் தடுக்க முயன்று கதறியுள்ளார். ஆனால், அந்த மூதாட்டி என்றும் பாராமல் கூலிப்படை கும்பல் அவரைக் கீழே தள்ளிவிட்டுத் தாமோதரனைத் தொடர்ந்து தாக்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடி வரத் தொடங்கியதும், இருவரும் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

படுகாயமடைந்த தாமோதரனை மீட்ட பொதுமக்கள், அவரைச் சிகிச்சைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மருத்துவமனைக்குச் சென்ற போலீஸார், தாமோதரனிடம் விசாரணை நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் இருசக்கர வாகனப் பதிவு எண்களை வைத்துப் போலீஸார் விசாரித்ததில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த பரத் (19) மற்றும் அகஸ்டின் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸார் சென்றபோது அவர்கள் வீட்டில் இல்லை. இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்றனர்.

அதிர்ச்சித் தகவல்

அங்கு போலீஸாருக்கு ஒரு விசித்திரமான அதிர்ச்சி காத்திருந்தது. தாமோதரனின் காலை உடைத்த குற்றவாளியான அகஸ்டின், சம்பவத்திற்குப் பிறகு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து, அவருக்கும் கால் முறிவு ஏற்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொன்மணி (32) என்ற ரவுடியிடம் இதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, கொலைக் குற்ற வழக்குகளில் பலமுறை சிறைக்குச் சென்று வந்த ரவுடி பொன்மணியைப் போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, தாமோதரனின் உயிருக்குச் சேதம் விளைவிக்காமல், கால்களை மட்டும் உடைப்பதற்காக அவரது மனைவி வசந்தா, தன்னிடம் 4 லட்சம் ரூபாய் பேசி, அட்வான்ஸாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகப் பொன்மணி வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வசந்தாவையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் வசந்தா மற்றும் பொன்மணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விபத்தில் கால் உடைந்த கூலிப்படை வாலிபர்

தாமோதரனின் காலை உடைத்துவிட்டு தப்பியோடிய போது, மதுரவாயல் அருகே கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்ட அகஸ்டினை, தற்போதைய மருத்துவ நிலை காரணமாக உடனடியாகச் சிறைக்கு அனுப்ப முடியவில்லை. எனவே, "காவல்துறை எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்" என்று எழுதி வாங்கிக்கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41-ன் கீழ் மட்டும் வழக்குப் பதிவு செய்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரது கால் காயம் குணமாகிச் சரியான பிறகு, அவர் மீது சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தாலி கட்டிய கணவன் என்பதால், கொன்றுவிடாமல் உயிருக்குச் சேதம் இன்றி காலை மட்டும் உடைக்கச் சொன்னேன்" என்று மனைவி வசந்தா போலீஸாரிடம் கூறிய வாக்குமூலம், பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+