ஜென்சி திமுக ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பன் முன்ஜாமீன் தள்ளுபடி... கைதாக வாய்ப்பு?
சென்னை: திமுகவின் ஜென்சி இசட் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பன் மீது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேலி செய்தல், அரசுக்கு அவதூறு விளைவித்தல் மற்றும் பெண்களின் நாகரிகத்தை சீர்குலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே அன்பானந்தன் அரியப்பன் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் விஜய்யை கேலி செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'Gen Z' பிரிவு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பன் வீட்டில் கடந்த ஜூன் 24ம் தேதி நள்ளிரவில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனை நடத்தினார்கள். இது தொடர்பாக கிடைத்த தகவல்களின்படி, அன்பானந்தன் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார்; அதில் அவர் விஜய்யின் மகனுடன் தொலைபேசியில் பேசுவது போல நடித்து, விஜய்யின் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்பதுடன், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தேர்தல் தோல்வி குறித்து விஜய் தெரிவித்த கிண்டலான கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த வீடியோவை அன்பானந்தன் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, தவெக கிழக்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அன்பானந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே நள்ளிரவில் போலீசார் நடத்தினார்கள். அவரை கைது செய்ய முயன்றதாக திமுகவினர் அப்போது குற்றமசாட்டினார்கள். காவல்துறையின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
இந்த சூழலில் முதல்வர் விஜய் தனது பிறந்தநாளை நடிகை திரிஷாவுடன் இணைந்து கொண்டாடியதாக கூறி விமர்சித்ததாக தி.மு.க. 'ஜென்-சி' சமூக வலைதள செயல்பாட்டாளர் அன்பானந்தம் வீடியோ பரவி விவகாரம் பெரிய அளவில் விவாதமாக உருவெடுத்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பானந்தம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மனுதாரர் யாரையும் மிரட்டவில்லை. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தவில்லை. பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பவில்லை. ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்காக அவதூறு வழக்குத்தான் தொடர முடியும்" என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில், மனுதாரர் முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பாக வேறு ஒரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். உடனே முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.














Click it and Unblock the Notifications