அரசு பள்ளியில் விஜய் புகைப்படம் மாட்டிய விவகாரம்: அண்ணாமலை, அதிமுக ஐடி விங் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளி வகுப்பறையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் சிலர் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை சுவரில் மாட்டி, அதனை ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாஜக நிர்வாகி அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

row-erupts-over-alleged-tvk-activity-inside-government-school-classroom-in-uthiramerur

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் ராஜ்மோகனுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.

ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் விஜய் அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, அதிமுக ஐடி விங் சார்பிலும் இந்த சம்பவம் குறித்து விமர்சன பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் "காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே அரசு வகுப்பறையில் முதல்வர் விஜய் அவர்கள் புகைப்படத்தை சுவரில் மாட்டி அதனை ரீல்ஸ் ஆக எடுத்து வெளியிட்ட தவெக ஆச்சரியக்குறிகள்..

இதுதான் நீங்க சொன்ன அந்த மாற்றமா விஜய் சார்!. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்... என்று பதிவிட்டு, #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+