சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. புற்றுநோயை விரட்டும் சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. குழந்தைகளுக்கு தரலாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அளவுக்கு அதிகமான சத்துக்களை கொண்டது சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. ஆனாலும் ஒருசிலருக்கு இந்த கிழங்கு அலர்ஜியை தந்துவிடும். யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

வைட்டமின் A,D,C, B-6 பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து என நிறைய சத்துக்களை கொண்டது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. இப்படி நிறைய வைட்டமின்கள் இருப்பதால்தான், செரிமான கோளாறுகளை இந்த கிழங்கு சீர்செய்கிறது.

Do you know the Super Health Benefits of Sweet Potato and sweet potato is the Fantastic Food for children

இதயநோய்: இதயநோய், மாரடைப்பு போன்ற ஆபத்திலிருந்தும் நம்மை காக்கிறது.. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் இந்த கிழங்கின் முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது. இதிலுள்ள வைட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்க துணை புரிகிறது. எலும்புகளை உறுதிப்படுத்த உதவுகிறது. இதனால், பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு பேருதவி புரிகிறது.

அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டக்கூடியது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகள். உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது..

நார்ச்சத்துக்கள்: நிறைய நார்ச்சத்து உள்ளதால், உடலிலுள்ள நச்சுகள், கழிவுகளை வெளியேற்றுகிறது.. வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதில், சர்க்கரைவள்ளி கிழங்கின் முக்கியத்துவம் அதிகமானது..

குளிர்காலங்களில் இந்த கிழங்கை சாப்பிடுவதால், நம்முடைய சருமம் பாதுகாக்கப்படும்.. தோலில் அலர்ஜி , அரிப்புகள் ஏற்பட்டால், சர்க்கரை வள்ளிக்கிழங்கை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து, அதனுடன் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, பேஸ்ட் போல கலந்து, அரிப்பு உள்ள இடத்தில் தடவினாலே நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடை: கிழங்கு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பார்கள்.. ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இநத் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த உணவு என்றே சொல்லலாம்.

காரணம், நார்ச்சத்து, ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகமாக துரிதப்படுத்தும்.. பசியையும் கட்டுப்படுத்திவிடும்.

குறிப்பாக, சர்க்கரைவள்ளி கிழங்கையும் காலை நேர உணவில் சேர்த்து கொள்ளலாம்.. எனவே, உடல் எடையை குறைக்க, வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை காலை உணவாகவே எடுத்து கொள்ளலாம்.. அல்லது இந்த கிழங்கை சாலட் போலவும், அடுப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அடுப்பில் இந்த கிழங்கை சுட்டு எடுத்து, அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, மிளகுதூள், சீரக தூள், பிளாக் சால்ட், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் இருப்பவர்களும் இந்த கிழங்கை டாக்டர்களின் அனுமதியை பெற்று அளவாக சாப்பிடலாம். ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இதிலிருந்தாலும், கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்காது என்கிறார்கள்.

பிறந்த குழந்தைகள் 7 மாதங்களில் இருந்து உணவு கொடுக்க துவங்கும்போது, இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து தரலாம் என்கிறார்கள்.. இதனால், குழந்தைகள் வளர்ந்த பிறகும் குடல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்..

குழந்தைகள்: அதுமட்டுமல்ல, குழந்தையிலிருந்தே இந்த கிழங்கை சாப்பிட தந்தால், குடலுக்கும் அது பழகிவிடும்.. அதிலிருக்கும் நார்ச்சத்து மலக்குடலை சரி செய்து புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதைத் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இத்தனை நன்மைகள் இருந்தாலும், ஒருசில தீமைகளும் இருக்கவே செய்கின்றன.. சர்க்கரைவள்ளி கிழங்கில், பொட்டாசியம் சத்து நிறைய உள்ளதால், இதை அதிகமாக சாப்பிடும்போது, பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருமாம்..

சிறுநீரக கோளாறு: அதேபோல ஆன்டி ஆக்ஸிடன்ட் சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ளதால், இதை அதிகமாக சாப்பிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. கல்லீரல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்கனவே இருப்பவர்களும் இதை தவிர்த்துவிடலாம். இதை அதிகமாக சாப்பிடும்போது, விளைவுகள் இன்னும் மோசமாகலாம்..

நிறைய நார்ச்சத்து இருப்பதும், செரிமான கோளாறினை உண்டுபண்ணிவிடும். இந்த கிழங்கை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, முடி, புருவங்களில் உள்ள முடி உதிர்தல், வெடிப்புற்ற உதடு, வறண்ட சருமத்தை தந்துவிடும்..

கல்லீரல்கள் : சிலசமயம் கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். மனிடோல், சர்க்கரை ஆல்கஹால் அல்லது பாலியால் போன்ற கார்போஹைட்ரேட் வகைகள் உள்ளன.. இவைகளால் வயிறு உபாதைகள், அசவுகரியங்கள் ஏற்படலாம்.. எனவே, பெண்களுக்கு 700 மைக்ரோ கிராம், ஆண்களுக்கு 900 மைக்ரோ கிராம் மட்டுமே இந்த கிழங்கை சாப்பிட வேண்டுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+