ஒரே காய்.. புடலங்காயின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இதுதான்.. அட்டகாசமான புடலங்காய் இலை ஜூஸ்
சென்னை: கல்லீரல் + சிறுநீரகம் + நரம்புகள் இந்த மூன்றையுமே காக்கக்கூடிய ஒரு காய் உண்டென்றால் அது புடலங்காய்தான்.. அப்படியென்ன சத்துக்கள் இந்த காயில் உள்ளது?
வைட்டமின் A, B, C, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், மாங்கனீசு போன்றவைகள் நிறைந்த காய்தான் இந்த புடலங்காய்.

நீர்க்காய்கள்: நீர்க்காய்களில் மிக முக்கியமானது.. நாட்டுக்காய்களில் தவிர்க்கவே முடியாதது.. புடலங்காய் இளசாக இருந்தாலும்சரி, முற்றலாக இருந்தாலும், ஒரேமாதிரியான சத்துக்களை தரக்கூடியது.
நீர்ச்சத்து காய் என்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும்.. இதனால், மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்.. இதன்மூலம் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. மலச்சிக்கல் இருந்தாலும்கூட, புடலங்காய் சாறு 2 ஸ்பூன் குடித்தாலே, நிவாரணம் கிடைக்கும். இதனால் குடல் புண்களும் ஆறிவிடும்.
குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, புடலங்காய்களை போலவே, புடலங்காயின் இலைகளும் மருந்தாகின்றன.. இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து தினமும் 2 ஸ்பூன் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே இதயநோய்கள் நீங்கிவிடுமாம்.
நீர்ச்சத்து + நார்ச்சத்து நிறைந்த காய் என்பதால், உடல் எடை குறைப்பதில் புடலங்காய்களின் பங்கு ஏராளம். இதன்மூலம் கொழுப்பையும் எளிதாக கரைக்க முடியும்.
நரம்புகள்: நரம்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கு இந்த புடலங்காய் மிகவும் நல்லது.. வைட்டமின் B6 இந்த காயில் உள்ளதால், மூளையின் செயல்பாடுகளை சீராக்கி, நரம்புதூண்டுதல்களையும் மேம்படுத்துகிறது..

இதனால் மன அழுத்தம், மன பதட்டம் தணிகிறது.. நன்றாக தூக்கமும் வரும்.. ஒருவேளை இரவில் சரியாக தூக்கம் வராவிட்டால், புடலங்காய் சாறு குடித்து வந்தாலே போதும். நரம்பு செயல்பாட்டை சீராக்கி நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
மஞ்சள் காமாலை: கல்லீரலின் காவலன் என்று கீழாநெல்லி இலைகளை சொல்வோம். அதுபோலவே, கல்லீரலுக்கு இந்த புடலங்காய்களும் உதவுகின்றன..
மஞ்சள் காமாலையின்போது, புடலங்காய் இலைகளையும், புடலங்காய்களையும் மருந்தாக தருவார்கள்.. அதாவது, மல்லி விதைகளுடன், இந்த புடலங்காய் இலையையும் சேர்த்து வைத்து நசுக்கி, அதன் சாறை மட்டும் மருந்தாக தருவார்கள். இதனால், காமாலை குறைந்து கல்லீரல் பலப்படும்.
சிறுநீரகத்துக்கு இந்த புடலங்காய் கவசம் போன்றது.. பொதுவாக நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் சிறுநீரகத்தை தாராளமாக பிரித்து வெளியேற்ற உதவும்.. அந்தவகையில், சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களையும், குடலில் நஞ்சுக்கள் இருந்தாலும் அதனையும் சேர்த்தே இந்த புடலங்காய் வெளியேற்றுகிறது.. அதுமட்டுமல்ல, சிறுநீரகத்தில் திரவங்கள் சுரக்கப்படுவதையும் சீராக்கி, சிறுநீர்ப்பையின் பணிகளையும் செம்மைப்படுத்துகிறது.
ஆண்கள்: இந்த புடலங்காய்களை ஆண்கள் அதிகம் தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டுமாம். இதனால், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும் என்பார்கள்.
குளிர்ச்சி நிறைந்த இந்த புடலங்காய், மூல நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.. இந்த புடலங்காயை பச்சை பயிறு கூட்டு போல வைத்து, 12 நாட்கள் என இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தாலே மூலம் நீங்கிவிடுமாம். எனினும், இப்படி மருந்தாக உட்கொள்ளும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிட்டால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.
குழந்தைகள்: சருமத்துக்கு மிகச்சிறந்த பொலிவையும், ஆரோக்கியத்தையும் இந்த புடலங்காய்கள் தரக்கூடியவை. புடலங்காயை குழந்தைகளுக்கு தந்து வந்தால், அவர்களுடைய ஞாபக சக்தி அதிகரிக்கும்... உடலில் உள்ள உஷ்ணமும் குறையும்.. அதேபோல, ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புடலங்காயை அதிகமாக தர வேண்டுமாம். அவர்களுடைய ஹைப்பர் ஆக்டிவிட்டியை இது குறைக்கிறதாம்..!!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications