கறிவேப்பிலை எனும் வரப்பிரசாதம்.. வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடிச்சு பாருங்க.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: கீரைகளை போல சமைத்து சாப்பிடுவதைவிட, சில இலைகளை வெறுமனே தின்று நின்றால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். அந்தவகையில், எந்தெந்த இலைகளை வெறும் வயிற்றில் மென்று தின்னலாம் தெரியுமா?
முதலாவதாக கறிவேப்பிலைகளை சொல்லலாம்.. தினமும் 10 கறிவேப்பிலைகளை வெறும் வயிற்றில், மென்று சாப்பிட்டாலே போதும். கொலஸ்ட்ரால் அளவு குறைவதுடன், ஜீரண சக்தியையும் இந்த இலைகள் அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் ஏகப்பட்ட இரும்புச்சத்துக்கள் உள்ளன.. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காய்ந்து போன கறிவேப்பிலையாக இருந்தாலும் சரி, அல்லது பச்சை கறிவேப்பிலையாக இருந்தாலும், எந்த வடிவில் உணவில் எடுத்து கொண்டாலும் சத்துக்கள் மாறுவதில்லை..
துளசி இலை: அடுத்ததாக, "மூலிகைகளின் ராணி" என்று சொல்லப்படும் துளிசி இலைகளை சொல்லலாம்.. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருக்கிறதாம்.. சுத்தமான செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, ஒரு கைப்பிடி துளசியை போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு வைத்துவிட வேண்டும்.. காலையில், வெறும்வயிற்றில் அந்த தண்ணீரை 48 நாட்கள் குடித்து வந்தால், தோல்சுருக்கம் நீங்கும்.. நரம்புகள் பலப்படும்... கண் பார்வை கூர்மை பெறும்.
அல்லது வெறும் துளிசியில் டீ தயாரித்து குடிக்கலாம். துளசி இலைகளை இப்படி சாப்பிட்டால் புற்றுநோயைத் தடுக்கலாம். இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
வேப்பிலைகள்: நான்கைந்து வேப்பிலை கொழுந்துகளையும் இப்படி வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.. ரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். புற்றுநோய் வளர்ச்சியை தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவும்.
புதினா இலைகள்: புதினா இலைகளை நீரில் போட்டு மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்தால் போதும்.. அல்லது எலுமிச்சம் சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால், அன்றைய தினத்துக்கான புத்துணர்ச்சி நமக்கு கிடைத்துவிடும்.
வாயில் துர்நாற்றம் இருந்தாலும் நீங்கிவிடும்.. பற்களில் கரைகள் இருந்தாலும் மறைந்துவிடும்.. இந்த இலைகளில் ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், நம்முடைய சருமத்தின் இருக்கும் துளைகளை இறுக்கமாக்குகிறது. இதனால், இளமையை சருமத்தில் தக்க வைக்க முடியும்.
அதேபோல, சிறிது சீரகத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தை போக்குவதுடன், வயிற்று வலிக்கும் தீர்வு கிடைக்கும்... முக்கியமாக கர்ப்பிணி பெண்களும் இந்த சீரக தண்ணீர் குடித்தால் மிகவும், நல்லது.
பூண்டு தண்ணீர்: அதேபோல, பூண்டு தண்ணீர் குடிக்கலாம்.. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பூண்டு ஊற வைத்த தண்ணீர் நிச்சயம் கை கொடுக்கும். முதல் நாள் இரவே பூண்டை சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு காலையில் அந்த தண்ணீரை லேசாக சூடுப்படுத்தி வெதுவெதுப்பாக, வெறும் வயிற்றில் குடித்துவந்தால், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்கி புத்தணர்ச்சி கிடைக்கும்.
அதுபோலவே, வெந்தயத்தையும் முந்திய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், செரிமானத்திற்கு நல்லது.. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெந்தய டீ: இந்த வெந்தயத்தில் டீ போட்டுக்குடிக்கலாம். வேப்பிலைகளை மென்று விழுங்க கடினமாக இருந்தால், வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, தண்ணீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications