முள்ளங்கி இலை.. பீட்ரூட் கீரையின் அற்புதம் தெரியுமா.. இனி முள்ளங்கி + பீட்ரூட்டை "இலை"யோடு வாங்குங்க
சென்னை: பெரும்பாலும் காய்களைவிட, அந்த காய்களின் இலைகளில்தான் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட இலைகள்தான், முள்ளங்கி இலை + பீட்ரூட் இலைகள்.
பீட்ரூட்டை பொருத்தவரை, பீட்ரூட்டில் உள்ள சத்துக்களைவிட, அதிகமான சத்துக்கள் அதன் இலைகளிள் இருக்கிறதாம். அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரையை குறைப்பதே இந்த இனிப்பு காய்களின் கீரைதான் என்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி: ரத்த சர்க்கரையை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது இந்த இலைகள்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பண்பு இந்த இலைகளுக்கு உள்ளது.. பீட்ரூட் இலையில், பொரியல், கூட்டு செய்வார்கள் என்றாலும், இந்த இலையில் சாலட், ஜாம், ஊறுகாய், சூப், ரசம் இப்படி பல ஐட்டங்களை செய்யலாம். ஆனால், இந்த இலைகளை பொடி பொடியாக நறுக்கக்கூடாதாம். செடிகளில், கத்தியை வைத்து வெட்டி எடுக்க கூடாதாம்.. கையிலேயே பறிக்க வேண்டுமாம்.
இந்த பீட்ரூட் இலைகளை, தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேகவைத்து, தண்ணீரை வடிகட்டிவிட வேண்டும். பிறகு அந்த இலைகளை மட்டும் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து வந்தாலே முடி கொட்டுவது நின்றுவிடுமாம்.
பீட்ரூட் கீரைகளில் அதிகம் காணப்படும் நரம்புகளில்தான், கரோட்டின் என்ற உயிர்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கரோட்டின் வைட்டமின் A சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் Aயின் சேமிப்புப் பட்டறை என்றே சொல்லலாம். குறைவான கலோரி உணவான இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதால், பீட்ரூட்டை இலைகளுடன் சேர்த்தே வாங்குவதுதான் இனி நல்லது.
முள்ளங்கி கீரை: அதேபோல, முள்ளங்கியை எடுத்துக்கொண்டால், முள்ளங்கியில் இருப்பதைவிட 6 மடங்கு, வைட்டமின் C, முள்ளங்கி கீரையில் இருக்கிறதாம். உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன், நோய்களை அண்ட விடாமல் இந்த இலைகள் தடுக்கின்றன. இதனால், கல்லீரல் மட்டுமல்ல, சிறுநீரகம், நுரையீரல் இதயம், கண்கள் என அனைத்து உறுப்புகளுமே திறன்பட செயலாற்ற இந்த கீரை பேருதவி புரிகிறது.
சுவாசப்பாதையில் உள்ள தொற்றுகளை அகற்றுவதால் சிறுநீரகம் காக்கப்படுகிறது.. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு வேளையாவது, இந்த கீரையை சாப்பிடுவதல், கல்லீரல் காக்கப்படுகிறது.. நீரிழிவு நோயாளிகள், இந்த முள்ளங்கி கீரையில் சாறு எடுத்து, வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகுமாம். அந்தவகையில் சிறுநீரகம் சீராக செயல்பட உதவுகிறது.
கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை இந்த முள்ளங்கி இலைகள் தீர்க்கின்றன.. மேலும், இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது முள்ளங்கி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சருமத்துக்கு இந்த கீரை ஆரோக்கியம் தரக்கூடியது.. இந்த கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால், தோலில் ஏற்படும் அலர்ஜிகள் அகலும்..
இந்த கீரையின் சாற்றினை 6 ஸ்பூன் குடித்து வந்தாலே, சிறுநீரகத்திலுள்ள கற்கள் வெளியேறிவிடுமாம்.. நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரி குறைவாக உள்ள இந்த கீரை, உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது.. இதனால், எடை குறைபவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம். முள்ளங்கி வாங்கினால், உயிர் சத்துகள் நிறைந்த இந்த கீரையையும் சேர்த்தே வாங்க வேண்டும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications