முருங்கை கீரை, நாட்டு கோழி முட்டையை 48 நாள் சாப்பிட்டு பாருங்க! சூப்பர் மேஜிக்! 100 யானை பலம்!
சென்னை: முருங்கைக் கீரையையும் நாட்டுக் கோழி முட்டையையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் அதன் பயன்கள் மேஜிக் போன்ற உணர்வை கொடுக்கும்.
முருங்கைக் கீரை- கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மையை கொடுக்கும். அதிலும் முருங்கைக் கீரை உடலுக்கு தேவையான இரும்பு சத்தையும் நார்ச்சத்தையும் சேர்த்தே கொடுக்கும். இது நூறு யானை பலத்தை கொடுக்கும்.

முருங்கை இலையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, புரதம், இரும்பு சத்து, பொட்டாசியம் உள்ளிட்டவை உள்ளது. சாப்பிடும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இந்த இலைகளை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினந்தோறும் சாப்பிட குடல் பூச்சிகள் அழிந்துவிடும்.
குழந்தை பிறந்த தாய்மார்கள், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள தாய்ப்பால் அதிகம் சுரக்கும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் 15 மி.கி. முருங்கை கீரை சாறை தேன், 10 மிளகுகளை பொடித்து சாப்பிட்டு வர வேண்டும். நரம்பு தளர்ச்சி. நரம்பு கோளாறுகளையும் குறைக்கும். நீண்ட நேரம் சோர்வடையாமல் உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
உடல் சூட்டை தணிக்கும். சிறுநீரை பெருக்கும். சர்க்கரை நோயாளிகள் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் அதிக பலன்கள் கிடைக்கும். குறைந்த செலவில் அதிக சத்துகள் கிடைக்கும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கைக் கீரை உணவு மிகவும் பலனை அளிக்கும். விந்தணு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும்.
முருங்கைகீரையை நாட்டு கோழி முட்டை, சின்னவெங்காயம் , தேங்காய் எண்ணெய் கொண்டு பொரியல் செய்து 48 நாட்களுக்கு அதாவது ஒரு மண்டலம் சாப்பிட்டால் ரத்தம் சுத்தகரிக்கும், ரத்தம் விருத்தியாகும். இடுப்பு எலும்புகள் கழுத்து எலும்புகளும் வலுபெறும். ஆண்மை பிரச்சினைகள் நீங்கும். உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் சக்தி முருங்கை கீரைக்கு உண்டு.
முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோய் குணமடையும். பற்கள் உறுதி அடைய முடி நீளமாக வளர இந்த கீரை அவசியம். வாய்ப்புண்ணுக்கும் வயிற்று புண்ணுக்கும் அவசியமான ஒன்று. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மூளையின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
ஆஸ்துமா, மார்பு சளி, சைனஸ் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை இலையை சூப் வைத்து குடித்து வரலாம். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். கர்ப்பிணிகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய கீரை. முருங்கை இலை சாறுடன் எலுமிச்சை கலந்து தடவினால் முகப்பருக்கள் மறையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது.
உங்கள் சருமத்தில் உள்ள தொற்றுகளை நீக்கும். வாரத்தில் இரு நாட்களாவது இந்த முருங்கை கீரையை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். மலச்சிக்கல், பித்த மயக்கம், கண் நோய் உள்ளிட்டவை குணமாகும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications