இடுப்பில் கொழுப்பு குறையணுமா? உடல் எடை இறங்கணுமா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க.. சூப்பர் வைட்டமின் C
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு காலை நேரத்தில் பெஸ்ட் உணவு எது தெரியுமா? இந்த சூப்பர் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.
உடல் எடை குறைக்க வேண்டுமானால், காலை உணவில் மட்டுமே பிரதான கவனத்தை செலுத்த சொல்கிறார்கள்.. சமீபத்தில், உடல் எடை பராமரிப்பில், காலை உணவின் பங்கு குறித்து ஆய்வு ஒன்று மிக முக்கியமான தகவலை வெளியிட்டிருந்தது.

அதிக உடல் எடை: அதில், உடல் எடையை சீராக பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர், தினமும் காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களாம். எனவேதான், காலை உணவின் அவசியத்தை தொடர்ந்து மருத்துவர்கள் வலியுறுத்தி கொண்டேயிருக்கிறார்கள்.
பெரும்பாலும் வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதால், கூடுதல் பலன் கிடைக்கிறதாம்.. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை வைட்டமின் C உணவுகள் அதிகமாக தருகின்றன.. அத்துடன், நாள் முழுவதும் உடலுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சக்தி இந்த வைட்டமின் C சத்துக்களுக்கு அதிகமாகவே இருக்கிறதாம்.
முழு தானியங்கள்: அதனால்தான், உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை போன்றவைகளை காலை உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். காரணம், இந்த உணவுகளில் அத்தனையும் வைட்டமின் C நிறையவே உள்ளது.
இவைகளில் அளவுகடந்த பலனை தருவது ஓட்ஸ் உணவுதான்.. காரணம், இதில் கலோரிகள் குறைவு, கார்போ ஹைட்ரேட் அளவு அதிகம் என்பதால் உடல் எடையை நிறையவே குறைக்க உதவுகிறது.. பீட்டா குளூக்கன் என்ற ஒரு வகை நார்ச்சத்தும் இந்த ஓட்ஸ்களில் இருப்பதால், இடுப்பு, தொடை பகுதிகளிலுள்ள கொழுப்பு குறைய துவங்குகிறது..
அவல் உணவுகள்: உடல் எடையை குறைக்க நினைத்தால், அதில் காய்கறிகளையும் வேகவைத்து உப்புமா செய்து சாப்பிட வேண்டும். கோதுமை வகையறாக்களில், மாவைவிட, அவல் சேர்த்து கொள்ளலாம். அவல் எளிதில் ஜீரணமாக கூடியது..
மேற்கண்ட ஏதாவது ஒரு உணவுடன், சுண்ணாம்புச்சத்து நிறைந்த உணவையும் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக, தயிர், பாலாடைக்கட்டிகள் மூலம் கிடைக்கும் இந்த சத்துக்களை எளிதாக பெறலாம். இதனால், மூளை, நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயல்படும்..
வாழைப்பழம்: மேற்கண்ட உணவுகளில் எதுவுமே சாப்பிட முடியாவிட்டாலும், ஒரேஒரு தக்காளி பழத்தையாவது சாப்பிடுவது சாப்பிட்டுவிட வேண்டுமாம். காரணம், வைட்டமின் C அதிகம் நிறைந்துள்ளது இந்த தக்காளி பழத்தில்தான்..
தக்காளி விரும்பாதவர்கள் அல்லது வேகவைத்த முட்டையை தினமும் 2 சாப்பிடலாம் அல்லது 1 வாழைப்பழத்தையாவது சாப்பிட வேண்டுமாம். அதேபோல, காலை உணவை முடித்ததுமே கிரீன் டீ குடிப்பதை வழக்கமாகி கொள்வதால் கூடுதல் நன்மை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications