கடல் மீனில் சத்து இதுதான்.. புரோட்டீன் சங்கரா.. சத்தான முரல் மீன்கள்.. உடல் எடை குறைக்க உதவும் மீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும், உடல் எடையை சீராக வைத்து கொள்பவர்களுக்கும், உதவக்கூடிய சில வகை மீன்களை பற்றி பார்ப்போம். இந்த மீன்களில் ஏதாவது ஒன்றை உணவில் அடிக்கடி சேர்த்து வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய பலன்களையும் சுருக்கமாக பார்ப்போம்.

வழக்கமாக இறைச்சியிலேயே, பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவை கடல் மீன்கள் தான். இதற்கு காரணம், மனித குலத்துக்கு தேவைப்படும் அதிமுக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இந்த மீன்களில் நிறைந்திருப்பதுதான்.

mural fish needle fish weight loss

இதய நோயாளி: அதேசமயம், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் மீன்களை குறிப்பிட்ட அளவு சாப்பிட வேண்டியிருக்கிறது. இதில், சில மீன்கள் மிகுந்த பலனை பெற்றிருக்கின்றன.

அதாவது, 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்களுக்கு உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இதற்கு பிரதான காரணம், சாச்சுரேடட் கொழுப்புக்கள் இந்த மீன்களில் நிரம்பியிருப்பதுதான்.. இவைகள் உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும் பங்கை பெற்றுள்ளன.

குறிப்பாக, கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன், சாளை மீன், சங்கரா மீன், நெத்திலி, சூரை மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.. இந்த மீன்களில் எல்லாம் முட்கள் அதிகம் என்றாலும், முட்கள் நிறைந்த மீன்களில்தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள எலும்புகளையும் சேர்த்து மென்று சாப்பிடும்போது, கால்சியம் நமக்கு போதுமான அளவு கிடைக்கிறது.

நெத்திலி மீன்கள்: மீனவர்களுக்கே அரிதாக கிடைக்கும், சத்துநிறைந்த முரல் மீன்களையும் தவறவிடக்கூடாது.. வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ளவை முரல் மீன்களாகும். உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், இதய நோயாளி, சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை உணவில் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெய் இந்த 3 பொருட்களை மட்டுமே சேர்த்து மீனை வேகவைத்தோ அல்லது மேரனேட் செய்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது நெருப்பில் சுட்டோ சாப்பிட்டால் போதும்.. சங்கரா மீனில் குறைந்த அளவிலான கலோரிகளும் அதிக அளவு புரதமும் உள்ளதால், இந்த சங்கரா மீனின் தலையை மட்டுமே வைத்து, சூப், ரசம் போல செய்து சாப்பிடலாம்.

பாதரசம்: அதேசமயம், நிறைய பாதரசம் உள்ள மீன்களை குறைவாக சாப்பிடலாம்.. கானாங்கெளுத்தி மீன் மற்றும் பாலிகுளோரினேடட் பைபினைல், பாதரசம் அதிகமுள்ள விலாங்கு மீன், வாளை மீன், சூரை மீன்கள் போன்றவைகளை முற்றிலும் தவிர்த்துவிடாமல், குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம் என்கிறார்கள். எனவே மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்தவகை மீன்களை எடுத்துக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+