"துத்திக்கீரை"... மூல நோய்களை அடித்து விரட்டும் அற்புத கீரை.. நலனை அள்ளி அள்ளி தரும் "சக்கர காய்கள்"
சென்னை: தங்குதடையின்றி எங்கும் படர்ந்து கிடக்கும், இந்த துத்திக்கீரையின் மகத்துவத்தை பலரும் அறிவதில்லை.. டாக்டர்களின் ஆலோசனை பேரில் இந்த கீரையை பயன்படுத்தினால், ஆரோக்கியம் தழைத்தோங்கும்.
முருங்கை, வாழை மரம் போலவே, இந்த துத்திச்செடியும், வேர், பூ, இலை, மட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டகொண்டவை. இந்த கீரை தித்திப்பாக இருக்கும்.. பார்ப்பதற்கு, ஹார்ட் வடிவத்தில் இருக்கும்.. இதன் காய்கள் சக்கரம்போல் இருக்கும்..

பெரும்பாலும் இந்த கீரையை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆனால், வாரம் 2 முறை உணவிலும் பயன்படுத்தலாம். பாசிபருப்பு, சின்னவெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து கூட்டுபோல செய்து சாப்பிடலாம்.
துத்திக்கீரையின் முதன்மையான நன்மை என்னவென்றால், மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக திகழ்கிறது. ஆனால், பலவகைகளில் இந்த கீரையை பயன்படுத்தி மூலத்தை விரட்டலாம்.
மூலநோய்: உதாரணமாக, இந்த கீரையை பறித்து சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, தினமும் காலையில் ஒரு வாரத்துக்கு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தாலே போதும்.. மூலநோய் விரைந்து குணமாகும்..
அல்லது, துத்தி இலைகளுடன் சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, துவரம்பருப்பு 3 சிட்டிகை கலந்து, மிளகுத்தூள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.. இந்த இலைகளை அரைத்து கஷாயம்போல குடிக்கலாம்.. அல்லது வழக்கமான கீரை போல பொரியல் செய்து சாப்பிடலாம். ஆனால், புளியை தவிர்த்துவிட்டு, வழக்கமான கீரை குழம்பு போல கடைந்து சாப்பிடலாம்.
மிளகுதூள்: ஒரு வாணலில் நல்லெண்ணெய், சீரகம், சின்ன வெங்காயம், வதக்கி, அதில், துத்திக்கீரையையும் பொடியாக நறுக்கி போட்டு, மிளகுதூள், உப்பு தூள் சேர்த்து வதக்கி சாப்பிட்டாலும் மூலநோய் நெருங்காது. அல்லது, இட்லி மாவுடன் இந்த கீரையையும் அரைத்து சேர்த்து, தோசை போல சுட்டு சாப்பிட்டு வரலாம். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடும் நீங்கும். அல்லது இந்த இலையை வெங்காயம், பச்சை பயறு சேர்த்து, வேக வைத்துக்கடைந்து சாப்பிட்டாலும் மூலச்சூடு தணியும்.
ஒரு மண் பாத்திரத்தில், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து, இந்த இலைகளையும் அதில் போட்டு வதக்கி, வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து மூலம் உள்ள பகுதிகளில் கட்டிக்கொண்டாலே, மூலம்தொடர்பான எரிச்சல், வீக்கம், வலி, குத்தல் இப்படி அனைத்துமே சரியாகுமாம்.
எரிச்சல் தணிகிறது: வெறும் மூலம் மட்டுமேயல்லாமல் மற்ற கோளாறுகளையும் சரிசெய்கிறது இந்த துத்திக்கீரை. மலச்சிக்கலை தீர்க்கிறது.. சிறுநீர் எரிச்சலை தணிக்கிறது.. வாயு வியாதிகள் தீரும்.. குடல்புண்ணை ஆற்றுகிறது.. உடலுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கக்கூடியது.. செரிமானக்கோளாறை சரியாக்குகிறது.. உடலின் தசைகளை பலமடைய செய்கிறது. உடலில் அளவுக்கு அதிகமான சூடு ஏற்பட்டுவிட்டால், பசும்பாலுடன் இந்த துத்திஇலை பொடியை கலந்து சாப்பிட்டாலே போதும்..
சருமத்தை காக்க இந்த துத்திக்கீரை பேருதவி புரிகிறது.. உடலில் கட்டிகள், புண்கள் இருந்தால், அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றை கலந்து கட்டினாலே போதும்..
கருப்பை கோளாறுகள்: பெண்களுக்கு கருப்பை கோளாறுகளை நீக்கக்கூடியது.. மாதவிடாய் தொந்தரவுகளை அகற்றக்கூடியது. துத்தி இலையை நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், இந்த கீரை விதையின் பொடியை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

எலும்பு முறிந்தாலும்கூட, அந்த இடத்தில் இந்த இலையை அரைத்து பூசி, ஒரு துணியால் கட்டிவிட்டால் போதும்.. விரைவாக எலும்பு கூடிவரும்.. ஆனால், அந்த பகுதியை அசைக்காமல் இருக்க வேண்டும். இந்த இலையில் ரசம் போல வைத்து குடிக்கலாம். இந்த ரசத்தை குடித்தால் சிறுநீரக நோய்கள் நம்மை அண்டாது.
வாய், பற்கள், இரைப்பை முதல் பெருங்குடல், ஆசனவாய் வரை ஏற்படும் புண்கள் வலிகள், எரிச்சல்களை நீக்கக்கூடியது. படர்தாமரைக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கல்லீரல் நோய்க்கும், புற்றுநோய்க்கும் நிவாரணம் தரக்கூடியது.
தாதுபலம்: துத்திபூக்கள் தாதுபலம் கொண்டவை.. அதனால், இந்த பூக்களை பசும்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி பருகினால் நுரையீரல் தொந்தரவுகள் முதல் ஆஸ்துமா, காசநோய்கள் வரை தீர்த்துவிடும். துத்தி இலை, துத்தி பூ, துத்தி காய், துத்தி வேர், துத்தி வேர் என அனைத்து பாகத்தையும் கஷாயம் போல வைத்து குடித்தால், ஆண்மை அதிகரிக்கும். துத்தி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தல், பற்களில், ஈறுகளுக்கு நன்மை பயக்கும்












Click it and Unblock the Notifications