முருகன் தமிழ் கடவுள் இல்லைங்க.. வடநாட்டில் பிறந்தவர்?.. என்டிஆர் படத்தின் போஸ்ட்டால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இணைந்து தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய படம் ஒன்றை எடுத்து வருகின்றனர். இந்த படம் தொடர்பான போஸ்டர்கள், போஸ்டுகள் தற்போது சர்ச்சையாகி வருகின்றன.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இரண்டு பேருமே தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள். இவர்களின் கூட்டு முயற்சியில் இந்த 'காட் ஆஃப் வார்' (God of War) அல்லது 'ஷண்முகுடு' என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது.

ntr movie murugan

'காட் ஆஃப் வார்' (God of War) படம்

பொதுவாக தமிழ்கடவுள் என்றுதான் முருகன் அழைக்கப்படுகிறார். முருகன் என்ற பெயர் தமிழ்நாடு தாண்டினால் பலருக்கு தெரியாது. வடஇந்தியாவில் சில சுப்பிரமணிய கோவில்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் கூட முருகன் கோவில் அவ்வளவு இல்லை. அப்படி இருக்க தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு படம் எடுக்க.. தெலுங்கு திரையுலகம் முயல்வது ஏன் என்ற கேள்வி ஏற்கனவே உள்ளது.

முருகனுக்கு கோவிலே இல்லை

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தத் திரைப்படம், முருகக் கடவுளின் கதையை மையமாகக் கொண்டது என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. ஆனால் இப்போது இதுதான் சர்ச்சையாகி உள்ளது. போர் கடவுள் என்ற அடிப்படியில் கடவுள் போருக்கு செல்வதை மையமாக வைத்து படம் தயாராகி வருகிறது.

இதற்கு இடையில்தான் படத்தின் தயாரிப்பாளர் பதிவிட்ட ஒரு ட்வீட் தமிழ் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

சர்ச்சையைக் கிளப்பிய தயாரிப்பாளரின் போஸ்ட்

'ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி, தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் இது தொடர்பாக போஸ்ட் ஒன்றை செய்திருந்தார். அதில், "Born in the North. Forged in the Heartland. Worshipped in the South. Now... A tale destined to belong to the universe. என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது முருகன் வடக்கில் பிறந்தார்.. அவர் இந்தியாவின் மையப்பகுதியில் வளர்ந்தார். தென்னாட்டு மக்களால் வணங்கப்படுகிறார் என்று குறிப்பிட்டு உள்ளார். அவரைப்பற்றிய கதைதான் இது என்றும் போஸ்ட் செய்திருந்தார்.

அதாவது தமிழர்களை சீண்டும் விதமாக.. அவர் தமிழ்க்கடவுள் இல்லை என்பதை காட்ட வேண்டும் என்றே வேண்டுமென்று திமிர்த்தனமாக இந்த போஸ்டை செய்திருந்தார் 'ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி.

முருகன் தமிழ் கடவுள் இல்லைங்க.. வடநாட்டில் பிறந்தவர் என்று நர்ரேட்டிவ் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர் இப்படி போஸ்ட் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த ட்வீட் வெளியான உடனே, தமிழகத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள், திரையுலக விமர்சகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தயாரிப்பாளர் நாக வம்சிக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.

எங்கள் கடவுளை நீங்கள் திருட நினைப்பது தவறு என்று நெட்டிசன்கள் கடுமையாக போஸ்ட் செய்து வருகின்றனர். முருகனின் உண்மையான பெயர் 'சேயோன்'. அவர் சேயோன் என்ற பெயரில் சங்க இலக்கியக் காலத்திலிருந்தே தமிழர்களின் முதன்மைக் கடவுளாக, போர் வீரனாக வழிபடப்பட்டு வருகிறார். அவரை நீங்கள் நாட்டு கடவுள் என்று சொல்ல நினைப்பது தவறு என்று தமிழ் நெட்டிசன்கள் கொதித்து உள்ளனர்.

அதோடு அவருடைய தாய் கொற்றவை. எனவே, நீங்களாகவே வரலாற்றை உருவாக்கி, அதை நம்ப வைக்க முயற்சிக்காதீர்கள்.. இதெல்லாம் வரலாற்று திரிபு என்று விமர்சனங்களை அடுக்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+