கரூர் செல்வதற்கு முன்.. செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க விஜய் பிளான்.. வேகமாக நகரும் காய்கள்!
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரத்தில் 40 மக்கள் பலியான பின் அந்த பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த விஜய்.. தற்போது முதல்வராக கரூர் செல்ல உள்ளார். கரூரில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதை மனதில் வைத்து அங்கே விஜய் செல்ல இருக்கிறார்.
கரூருக்கு விஜய் செல்வதற்கு முன் சில கைது நடவடிக்கைகளை.. சில ஆக்சன் மாற்றங்களை.. சில கட்சி தாவல் நடவடிக்கைகளை கூட விஜய் மேற்கொள்வார் என்று செய்திகள் வருகின்றன. அது என்ன கைது?

தமிழக அரசியல் களம் தற்போது கரூர் மாவட்டத்தை நோக்கித் திரும்பியுள்ளது. முதல்வர் விஜய் அடுத்த சில வாரங்களில் அங்கே செல்ல இருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கரூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
அதிமுகவில் இருந்து வரிசையாக பலர் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இவரும் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத ஒரு மகா யுத்தத்திற்கு தவெக தலைவர் மற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய் வியூகம் அமைத்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன யுத்தம்?
அதிமுகவிலிருந்து விலகிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணையவுள்ளதாகவும், அவரே தவெக சார்பில் கரூர் இடைத்தேர்தல் வேட்பாளராகக் களம் இறங்குவார் என்றும் தகவல்கள் கசிகின்றன. இதற்காக விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும். இதற்காக விஜய் கரூர் செல்ல வேண்டும். இதை மனதில் வைத்தே இன்னொரு நடவடிக்கையை மேற்கொள்ள விஜய் முடிவு எடுத்துள்ளாராம்.
அதன்படி கரூர் செல்லும் முன் அவர் செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டமிட்டு உள்ளாராம். செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இதற்காக வேகமாக காய் நகர்த்த விஜய் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம்.
செந்தில் பாலாஜியை முடக்க வியூகம்?
கரூர் மாவட்ட அரசியல் என்றாலே நினைவுக்கு வருபவர் திமுகவின் அசுர பலம் கொண்ட தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி. தற்போதைய தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் வென்றிருந்தாலும், அவரது சொந்த ஊரான கரூரில் அவர்தான் திமுகவின் மொத்த தேர்தல் இயந்திரத்தையும் இயக்குபவர். அங்கே திமுகவின் முகமாக இருப்பவர் செந்தில் பாலாஜிதான்.
அவரை தற்போது காசுக்கு வேலை வழக்கில் கைது செய்ய விஜய் திட்டமிட்டு வருகிறாராம். முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய ஆளுநர் அனுமதி தேவை. போக்குவரத்துத் துறை வேலை வாய்ப்பு மோசடி தொடர்பான PMLA வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய அனுமதி கோரும் கோப்பிற்கு ஒப்புதல் அளிக்குமாறு தமிழக அரசு அண்மையில் ஆளுநருக்கு அவசர கடிதம் அனுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதை ஆளுநரிடம் பிரஷர் போட்டு வேகமாக முடிக்க விஜய் திட்டமிட்டு உள்ளாராம். ஆளுநர் அனுமதி கொடுத்தால் செந்தில் பாலாஜியை கைது செய்யவும் விஜய் திட்டமிட்டு உள்ளாராம். அதாவது செந்தில் பாலாஜி களத்தில் இருந்தால் கரூரில் திமுகவை வீழ்த்துவது எளிதல்ல என்பதை தவெக தலைமை நன்கு உணர்ந்துள்ளது.
இதன் காரணமாகவே, கரூரில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, செந்தில் பாலாஜியின் தேர்தல் வேலைகளுக்கு முட்டுக்கட்டை போட தவெக அரசு அதிரடி முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
