நெல்லிக்கனி.. நல்லதை மட்டுமே தரும் "நல்லக்கனி".. யார் யாரெல்லாம் நெல்லி இலைகளை சாப்பிடலாம்? வியப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லிக்காயின், கனி மட்டுமல்ல, வேர்களும், இலைகளும் கூட மருத்துவ குணங்கள் கொண்டவை.. அந்தவகையில், நெல்லியில் உள்ள சத்துக்கள் என்னென்ன? நமக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி சுருக்கமாக இங்கு காண்போம்

நெல்லிக்காய்களின் இலைகள் மருத்துவ பலன்கள் கொண்டவை.. பார்ப்பதற்கு புளிய இலை போலவே இருக்கும்.. வாய் சுகாதாரம் பேண வேண்டுமானால், நெல்லி இலைகளை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வாயில் ஊற்றி கொப்பளித்தால் போதும்.. வாயில் உள்ள கிருமிகள் நீங்கிவிடும்.. வாய்ப்புண்கள் இருந்தாலும் ஆறிவிடும்

gooseberry nellikai

கஷாயம்: இந்த நெல்லை இலைகள் கண்களுக்கும் நல்லது.. நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள், இதன் இலைகளை தண்ணீரில் ஊறவைத்து கஷாயம் செய்து, கண்களை கழுவினால், கண்ணில் ஏற்படும் நோய்கள் விலகும்... அதேபோல, உடலிலுள்ள பித்தத்தை நீக்ககூடியது நெல்லை இலைகள். எனவே, இந்த இலையில் கஷாயம் போல தயாரித்து குடிக்கலாம்.

தீவிரமான ஆஸ்துமா நோயாளிகளும் இந்த நெல்லி இலையை பயன்படுத்தலாம்.. இதனால் சுவாச கோளாறுகள் தலைசுற்றல், வாந்தி போன்றவை தீரும்.. வயிறு வலியால், வயிற்று போக்கால் அவதிப்படுபவர்கள், இந்த இலையை தண்ணீரில் ஊறவைத்து, சோம்பு கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

நெல்லி மர வேர்: நெல்லி மரத்தின் வேர்கள் கூட இதற்கு மருந்தாகும்.. வாந்தி, சுவையின்மை, மலச்சிக்கல், காய்ச்சல் ஏற்பட்டால், நெல்லி வேர்கள் கை கொடுத்து உதவுகின்றன.. சீதபேதி போன்ற பிரச்சனை இருந்தால், நெல்லி இலைக் கொழுந்தினை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்குமாம்.

நெல்லிக்காயை பொறுத்தவரை, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் இருந்தாலும், வைட்டமின் C சத்துக்கள்தான் நிறைய உள்ளன. அதாவது 600 மில்லி அளவுக்கு வைட்டமின் C இந்த பழத்தில் உள்ளது.

சத்துக்கள்: எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆஸ்துமாவை குறைக்கவும் நெல்லிச்சாறு பயன்படுகிறது. நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால் ஆஸ்துமா நீங்கும். தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் அண்டாது..

புற்றுநோய்களின் செல்களின் வளர்ச்சியை துவக்கத்திலேயே கட்டுப்படுத்திவிடும் இந்த நெல்லிக்காய். அனிமியா உள்ளவர்கள், இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்காயை தவறவிடக்கூடாது. இதனால் தலைமுடியும் அதிகமாகும்.. எனவேதான், ஷாம்புகள், எண்ணெய்களில் இந்த நெல்லிக்காயை மூலப்பொருட்களாக சேர்க்கிறார்கள். அதேபோல நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், தலைமுடி உதிர்தல் பிரச்சனை கட்டுக்குள் வரும்.

இன்சுலின்: சர்க்கரை நோயாளிகளும் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். எனினும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று நெல்லிக்காய்களை சாப்பிடுவது நல்லது. நெல்லிக்காயில் ப்ரோ அபோப்டோசிஸ் என்ற பண்புகள் உள்ளதால், மூட்டு வலி, முழங்கால் வலி, போன்ற பிரச்சனைகளையும் நெல்லிக்காய்கள் சரிசெய்கிறது

இதயத்திற்கு நல்லதை மட்டும் இந்த நெல்லிக்காயை, உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களும், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களும் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம். முதிர்ச்சியையும் தள்ளிப்போடக்கூடிய நெல்லிக்காய்கள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆனால், சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களும், குறைந்த அளவு ரத்தத்தில் சர்க்கரை உள்ளவர்களும் தவிர்த்துவிடுவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+