பயம்.. பயம்.. பயம்.. எதை கண்டாலும் பயமா? அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா விஜயகுமார்!
சென்னை: வனிதா விஜயகுமாருக்கு இப்படி ஒரு அரிய நோயா? இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளாரா? அப்படி எந்த வகை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் தெரியுமா?
அண்மைக்காலமாக சில நடிகைகள் தங்களுக்கு உள்ள அரிய வகை நோய்கள் குறித்து அவர்களாகவே பேட்டிகளிலும் சமூக ஊடகங்களிலும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இவரை போல் பல நடிகைகள் தங்களுக்கு இருக்கும் நோய் பாதிப்பு குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அது போல் மற்றவர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

அண்மையில் பாஜக பிரமுகரும் நடிகையுமான மாளவிகா அவினாஷ் தனக்கு ஒற்றை தலைவலி எனும் மைக்ரேன் இருக்கிறது என கூறியிருந்தார். இதனால் அவருடைய முகம் வீங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போட்டோவையும் அவர் வெளியிட்டிருந்தார். ஒற்றை தலைவலி என்பது பொதுவாக எல்லாருக்கும் வரும் பிரச்சினை என்றாலும் மாளவிகா அதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை பதிவை வெளியிட்டிருந்தார்.
நடிகை சமந்தாவை போல் நடிகை பியாவும் (கோ படத்தில் நடித்தவர்) மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கால்களில் வீக்கம், உடல் வலி போன்ற பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்ததாக தெரிவித்திருந்தார். அது போல் பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வரும் நிலையில் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் தன்னுடைய தோல் நிறம் மாறிவிட்டதாவும் தெரிவித்திருந்தார்.
இந்த வரிசையில் தற்போது வனிதா விஜயகுமாரும் தான் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா, ராஜ்கிரணுடன் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த வனிதா, தற்போது குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.
சர்ச்சை என்றால் வனிதா, வனிதா என்றால் சர்ச்சை என சொல்லும் அளவுக்கு அவருடைய வாழ்வில் பல சம்பவங்கள் நடந்துவிட்டன. பீட்டர் பாலை ஊரறிய திருமணம் செய்து அதுகுறித்த வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஆனாலும் அவரை விட்டு சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டார். தற்போது பீட்டர் பால் இறந்த நிலையில் வனிதாவின் முன்னாள் கணவர், வனிதாவின் 3ஆவது கணவர் என செய்திகளில் குறிப்பிடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தானும் பீட்டர் பாலும் சட்டபடி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒன்றாக வாழ்ந்தோம். எனவே நான் அவருக்கு மனைவியும் அல்ல, அவர் எனக்கு கணவரும் அல்ல என ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அரிய வகை நோய் இருப்பதை தெரிவித்துள்ளார். தான் கிளாஸ்ட்ரோபியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள வனிதா, சிறிய கூட்ட நெரிசல் உள்ள இடங்கள், பாத்ரூம், லிப்ட் உள்ளிட்ட இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
கிளாஸ்ட்ரோபியா என்பது பிற மனிதர்களின் துணை ஏதுமின்றி தனித்திருப்பதால் ஏற்படும் அச்சமாகும். சினிமா தியேட்டர், குகை, திருமண கூட்டம் போன்ற இடத்திற்கு சென்றால் நாம் ஆபத்தான இடத்தில் மாட்டிக் கொண்டோம் என்ற அச்சம்தான் இந்த நோய். உள்ளே மாட்டிக்கொள்வோமோ, மூச்சடைத்து இறந்துவிடுவோமோ என்றெல்லாம் அச்சப்படுவர். இந்த நோய் பாதித்தால் அடிக்கடி வியர்க்கும் அல்லது உடலில் நடுக்கம், நெஞ்சில் கல் போன்ற உணர்வு, வேகமாக துடிக்கும் இதயம், மூச்சுவிடுவதில் சிரமம், உடல் ஜில்லென இருப்பது, வயிற்றில் பிரச்சினை, மயக்கம், மயக்கம் வருவது போன்ற உணர்வு, வறண்ட வாய் உள்ளிட்டவை ஆகும். இந்த நோயால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications