முரல் மீன்கள்.. ஆரஞ்சு, கொய்யா, பீட்ரூட், இஞ்சி.. அடேங்கப்பா நுரையீரலை கிளீன் செய்ய சூப்பர் உணவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நுரையீரலில் தொற்றுக்கள் அண்டாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நுரையீரல் பலம் பெறுவதற்கு எந்தெந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து உண்ணலாம்?

மிக முக்கிய உறுப்பான நுரையீரலை, எப்போதுமே ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமாகும்.. முக்கியமாக தொற்றுக்கள் ஏற்படாதவாறு, பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகும்.

Lungs Lungs Infection

சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்றுநோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், தொழில்சார்ந்த தொற்று, போன்றவைகளால் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம். நீரிழிவு நோய், இதயநோய், உடல்பருமன், சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவைகளாலும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும்.. சிகரெட் பிடிப்பவர்களுக்கும், அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும், நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்..

இருமல், சளி: எனவே அடிக்கடி இருமல் வந்தாலும்சரி, நாள்பட்ட சளியாக இருந்தாலும் சரி, அலட்சியம் காட்டாமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.. காரணம், மூச்சு திணறலுடன் நெஞ்சுவலி ஏற்பட்டு, இருமலுடன் ரத்தம் வந்துவிட வாய்ப்புள்ளது.. எனவே, 15 நாட்களுக்குமேலாக இருமல் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும்..

அதேபோல, எலும்புகளிலும், தோல் பட்டைகளிலும் அதிக வலி ஏற்பட்டாலோ, திடீரென குரலில் மாற்றம் தென்பட்டாலோ காசநோய், ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இதற்கெல்லாம் பாட்டி வைத்தியத்தில் இறங்காமல் டாக்டரிடம் சென்றுவிட வேண்டும்.

நுரையீரல்:
அதேசமயம், நுரையீரலில் தொற்றுக்களை அண்டவிடாமல் தடுக்க, பாட்டி வைத்தியம், கை வைத்தியம் உதவலாம்.. ஆனால், அப்போதும்கூட, நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் கட்டாயம் தேவைப்படும். மற்றொருபக்கம் நுரையீரலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

குறிப்பாக, சமையலில் அதிகமாக இஞ்சி, பூண்டு இருக்குமாறு சமைக்க வேண்டும். இதன்மூலம் தொற்றுகள், நச்சுக்கள் அழிக்கப்படும்.. எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் நுரையீரல் புற்றுநோயும் நெருங்காது.. சுவாசப்பாதையும் தடையின்றி செயல்படும்..

ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப்பழங்களையும், காய்கறிகளையும் உணவில் அதிகம் எடுத்து கொள்ளலாம்.. கொய்யா, கிவி, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை, பைன் ஆப்பிள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றை நிறைய உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கீரைகள்: கீரை, முட்டைக்கோஸ், டர்னிப் கீரைகள், ப்ரோக்கோலி, இயற்கையான வைட்டமின் K ஆதாரங்களாகும். பீட்டாகரோட்டின், வைட்டமின் A நிறைந்த கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். ஒமேகா 3 நிறைந்த மீன்கள், பாதாம், வெள்ளரி விதைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்..

குறிப்பாக, முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றக்கூடியவை.. குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்கு பாதுகாப்பை தரும்.

பீட்ரூட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் சேர்மங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது... இந்த பீட்ரூட்டில் நைட்ரேட் சத்துக்களும் அதிகமாக உள்ளன. எனவே, நுரையீரல் செயல்பாடு எளிதாக நடக்க பீட்ரூட் உதவுகின்றன..

இஞ்சி டீ: நுரையீரலில் வலியிருந்தால், இஞ்சியில் டீ போட்டு குடிக்கலாம். காரணம், இஞ்சியில் அதிகளவு புரோஸ்டாலான்டின் உள்ளதால், வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.. ஆனால், இஞ்சியை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்து, அதற்குபிறகு, டீ தயாரித்து குடிக்க வேண்டும். துளசியும் இதில் சேர்த்து கொள்ளலாம். ஏனென்றால், காக்ஸ்- 2 வீக்கத்தை குறைக்கும் பண்பு துளசி இலைக்கு உள்ளதால், பச்சையாக அல்லது காயவைத்து டீ தயாரித்தோ குடிக்கலாம்.

அதிமதுரத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து டீ போல குடித்து வரலாம். வெறும் வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதாலும் சுவாச பாதையிலுள்ள நச்சுக்கள் வெளியேறும்.. எலுமிச்சை, இஞ்சி, புதினா இந்த மூன்றையும் சேர்த்து டீ தயாரித்து கடிக்கலாம். காய்ச்சல், சளி தொல்லை, சைனஸ், மூச்சுத் திணறல் என நுரையீரல் அழற்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

அதிமதுரம்: மஞ்சள், இஞ்சி இரண்டிலுமே மருத்துவ குணங்கள் உள்ளன.. இரண்டிலுமே ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே, இந்த 2 இரண்டையும் ஒரு ஸ்பூன் வீதம் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, தினமும் 2 வேளை குடித்தால் நுரையீரலுக்கு பலம் சேர்க்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+