கேரளாவில் 15 வயது சிறுவன் பலி.. ஓடையில் டைவ் அடிக்கும் போது மூக்கில் நுழைந்த அமீபா.. அறிகுறி என்ன?
சென்னை: மூளையை உண்ணும் அமீபாக்கள் மனிதர்களை எப்படி தாக்கும், இந்த அமீபாவால் கேரளாவில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் குருதத் . இவருக்கு 16 வயது. பூச்சாக்கல் பகுதியில் வசித்து வந்தனர். தந்தை அனில் குமார், தாய் ஷாலினி. இந்த நிலையில் குருதத், உள்ளூரில் ஓடையில் நீந்திய போது மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார்.
மூளையை பாதிக்கும் அமீபாக்கள் குறித்து பொதுமக்கள் இணையதளத்தில் தேடி வருகிறார்கள். அந்த வகையில் நேக்லீரியா எனும் அமீபாதான் இது போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள். நேக்லீரியா பவுலேரி எனும் அமீபாக்கள் ஏரிகள், ஆறுகள், ஓடைகளில் வசிக்கும். இந்த ஒரு வகை அமீபா மட்டுமே மக்களை தாக்குகிறது.
இதுகுறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் நீச்சல், டைவிங், அல்லது ஏரிகள், மற்றும் ஆறுகள் போன்ற நீருக்கடியில் டைவ் அடிக்கும் போது மூக்கு வழியாக இந்த அமீபாக்கள் மனிதர்களின் உடலுக்குள் செல்கின்றது. அங்கு மூளை திசுக்களை அழித்து நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறது.

பொதுவாக தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்கு பிறகுதான் இந்த அறிகுறிகள் தெரியும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும். அது போல் கவனமின்மை, வலிப்பு, மாயத்தோற்றம், கோமா போன்ற அறிகுறிகள் இருக்கும். 5 நாட்களுக்குள்ளேயே மரணத்தை இவை ஏற்படுத்தும். இந்த அமீபா தாக்கினால் அதிகபட்சமாக நோயாளிகள் 18 நாட்கள் வரை உயிர் வாழலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமீபாக்கள் உப்பு கலந்த நீரில் வாழாது. அதனால் அவை கடல் நீரில் காணப்படுவதில்லை. இவை ஏரிகள் மற்றும் ஆறுகளில்தான் அதிகம் காணப்படுகிறது. கோடைக்காலங்களில் இந்த அமீபாக்களின் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் ஏற்படுகிறது. இவை ஒரு செல் உயிரி. இவை மிகவும் சிறியது. இவற்றை மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்க முடியும். மிகவும் அரிதாக இந்த அமீபாக்கள் நீச்சல் குளங்களில் கூட இருக்கும். குளோரின் போட்டு சுத்தப்படுத்த வேண்டும். 46 டிகிரி செல்சியஸிலும் இது நன்றாக வளரும்.
இவற்றை குளிரூட்டும் போது மட்டுமே இவை இறக்க நேரிடும். பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் அதிகம் வாழும். இவை குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும். நீச்சல் பயிற்சி எடுக்கும் போது மூக்கில் கிளிப் போட வேண்டும். பின்னர் மூக்கை சுத்தமான தண்ணீர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். இந்த அமீபா பாதித்தால் 97 சதவீதம் மரணம் நிச்சயம்.
இந்த அமீபாக்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. நீரின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்த அமீபாவால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த அமீபா பாதித்தோருக்கு அசித்ரோமைசின், ஃப்ளூகேனாஸோல், ரிஃபாம்பின், டெக்ஸாமீத்தாசோன் உள்ளிட்ட மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மில்டிஃபோசைன் என்ற புதிய மருந்து மூலமும் இந்த அமீபாக்கள் அழிக்கப்படுகின்றன.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications