ஆட்டுக்கறி இருக்கட்டுமே.. இந்த சைவ இறைச்சி பற்றி தெரியுமா? அசைவ இறைச்சியில் இத்தனை சத்துக்களா.. வாவ்
சென்னை: ஆட்டுக்கறி, மட்டன், மீன்களில் உள்ள சத்துக்களை சைவ உணவுகளில் பெற முடியுமா? சைவ இறைச்சி பற்றி தெரியுமா? தாவர இறைச்சி என்றால் என்ன? சைவ இறைச்சியில் உள்ள ஆச்சரியத்தக்க சத்துக்கள் என்னென்ன தெரியுமா? அவைகளை பற்றி சுருக்கமாக பாரப்போம்.
மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதற்குதான் தாவர இறைச்சி அல்லது சைவ 'சைவ இறைச்சி என்கிறார்கள். குறிப்பாக, சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் இந்த சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது. அதனால், தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
சுவை, நிறம்: இதை சாப்பிடுவதற்கு அப்படியே மாமிசங்களின் சுவையை போலவே இருக்கும். சுவையை தவிர நிறத்திலும் இறைச்சி போலவே இருக்க வேண்டும் என்பதற்காக மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் இந்த சைவ இறைச்சியில் கலக்கப்படுகின்றன.
இந்த தாவர இறைச்சியை சாப்பிடுவதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அசைவத்தை சாப்பிடாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். அதேபோல, அசைவத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று அச்சப்படுபவர்கள், இந்த சைவ இறைச்சியை தாராளமாக சாப்பிடலாம்.
உடல் எடை: இந்த சைவ இறைச்சியில் கொழுப்பு, கலோரிகள் மிகவும் என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல, அசைவத்துடன் ஒப்பிடும்போது இந்த சைவ இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் C, பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருப்பதுடன், இரும்பு, வைட்டமின் D துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைவாக உள்ளன.
தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கின்றன. இதனால் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.. மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது என்றாலும், மீன்களை சாப்பிட முடியாதவர்கள், அதை ஈடுகட்ட ராஜ்மா உண்ணலாம்.
புரதம்: ஆனால், இந்த சைவ இறைச்சி செரிமானம் ஆவதற்கு சற்று நேரம் பிடிக்குமாம். அதேபோல, தாவர அடிப்படையிலான புரத மாற்றீடுகள் புரதத்தின் நல்ல ஆதாரங்களாக இருந்தாலும், அவை எளிதில் உறிஞ்சக் கூடியதாக இருக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தாவர அடிப்படையிலான புரதங்கள் மற்றும் கோழி இறைச்சிகளுக்கிடையே உள்ள தொடர்பு ஒப்பீடு செய்யப்பட்டபோது, தாவர அடிப்படையிலான இறைச்சியை விட கோழி இறைச்சியில் புரத உறிஞ்சுதல் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. பல்வேறு சத்துக்களும், நன்மைகளும் உள்ளதால், இந்த சைவ இறைச்சியானது, உலகளவில் மக்களிடம் பிரபலமாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications